இலங்கை- தமிழருக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம்- பல கட்சிகள் புறக்கணிப்பு!
கொழும்பு: இலங்கையில் தமிழருக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இன்று அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தை ஜேவிபி உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பது அந்நாடு விடுதலை அடைந்த காலத்தில் இருந்தே முன்வைக்கப்பட்ட கோரிக்கை. ஆனால் பெரும்பான்மை சிங்களர்கள் தமிழர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். இதனால் இலங்கை தமிழினம் இனப்படுகொலையை எதிர்கொண்டது. இதனையடுத்து இலங்கையில் தமிழருக்கு தனிநாடு ஒன்றுதான் தீர்வு என ஆயுதப் போராட்டம் நடைபெற்றது.

இலங்கை ஆயுதப் போராட்ட காலத்தில் இந்தியா தலையிட்டு தமிழருக்கு அதிகாரப்பகிர்வு வழங்க வகை செய்யக் கூடியதாக இலங்கை அரசியல் சாசனத்தில் 13-வது திருத்தம் கொண்டு வந்தது. இந்த 13-வது திருத்தம் தொடர்பாக பல்வேறு முரண்பட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும் மத்திய அரசின் இலங்கை கொள்கையாக, 13-வது அரசியல் திருத்தத்தை செயல்படுத்த வேண்டும் என்பதாக இருந்து வருகிறது.
அண்மையில் இந்தியா வருகை தந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவிடமும் பிரதமர் மோடி இதனை வலியுறுத்தி இருந்தார்.
இதனிடையே இலங்கையில் இன்று தமிழருக்கான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகள் கூட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கூட்டியுள்ளார். தமிழருக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கக் கூடிய திட்டம் தம்மிடம் இருக்கிறது என ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்திருதார். இந்த நிலையில் இன்றைய அனைத்து கட்சிக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரத்தில் ரணில் கூட்டிய கூட்டத்தை ஜேவிபி உள்ளிட்ட சிங்கள கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் கட்சிகள், தமிழ் கட்சிகள் பங்கேற்பதாகவும் அறிவித்துள்ளன.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications