இலங்கை அதிபர் தேர்தலில் ட்விஸ்ட்.. திடீர் இழுபறி.. 2வது விருப்ப வாக்குகளை எண்ண ரெடியாகும் அதிகாரிகள்
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காட்சிகள் திடீரென மாற தொடங்கி உள்ளன. தொடக்கத்தில் 50%-க்கும் மேல் வாக்குகளைக் கொண்டிருந்த அநுர குமார திசாநாயக்க, தற்போது 39.44% வாக்குகளிலும் சஜித் பிரேமதாசா 33.88% வாக்குகளிலும் உள்ளனர். ரணில் விக்கிரமசிங்க 17.95% வாக்குகள் பெற்றுள்ளனர்
இலங்கை அதிபர் தேர்தலில் முன்னிலையில் உள்ளபோதும் வாக்கு சதவிகிதத்தில் அனுர குமார திசநாயக்க சரிய தொடங்கி உள்ளார். காலையில் 50 விழுக்காட்டிற்கு மேல் முன்னிலை பெற்றிருந்த நிலையில், 11 மணி நிலவரப்படி 42 விழுக்காடாக குறைந்தது. தற்போது 40% க்கும் கீழ் சென்றுள்ளது. 2ஆவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் அங்கே இரண்டாம் விருப்ப வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்க உள்ளன. இலங்கை தேர்தல் விதிப்படி, 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்றவரே வெல்ல முடியும். இறுதிச் சுற்று வரை அவர் 50 சதவிகிதத்தை தொடவில்லை என்றால் Instant Run of Method நடக்கும். அதாவது இரண்டாவது முன்னுரிமை வாக்குகள் எண்ணப்படும். அதாவது 1 ஆப்ஷனாக வாக்காளர்கள் ஒருவரை தேர்வு செய்வார்கள். அதில் பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் இரண்டாவது ஆப்ஷனாக ஒருவரை தேர்வு செய்து இருப்பார்கள்.. அவர்களுக்கான வாக்குகள் எண்ணப்படும்.
இலங்கை தேர்தல் விதிப்படி ஒருவர் அதிபராக 50 சதவிகித வாக்குகளுக்கும் கூடுதலாக பெற வேண்டும். இதனால் அங்கே Instant Run of Method முறையில் வாக்குகளை எண்ண ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர். தேர்தல் அதிகாரிகள் இதற்காக தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் முடிவுகள் நாளை வரை கூட இழுக்கப்படலாம். நாளை வரை கூட வாக்குகள் தொடர்ந்து எண்ணப்படலாம்.
யார் இவர்?: அனுர குமார திஸாநாயக்க பொதுவாக ஏகேடி என்று இலங்கை அரசியலில் அழைக்கப்படுகிறார். அவர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனதா விமுக்தி பெரமுனா (2014 முதல்) மற்றும் தேசிய மக்கள் சக்தி (2019 முதல்) ஆகியவற்றின் தற்போதைய தலைவரும் ஆவார். 2019 இல் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான இவர்.. மீண்டும் 2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தற்போது வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.
திஸாநாயக்க தனது பள்ளிப் பருவத்திலிருந்தே ஜே.வி.பி. கட்சியில் ஈடுபட்டு வந்தார். 1995 இல் ஜே.வி.பி.யின் பொலிட்பீரோவில் இணைவதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.
2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் திஸாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். 2004 முதல் 2005 வரை விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகவும், 2015 முதல் 2018 வரை எதிர்க்கட்சியின் தலைமை கொறடாவாகவும் பணியாற்றினார். 2 பிப்ரவரி 2014 அன்று நடைபெற்ற கட்சியின் 17வது தேசிய மாநாட்டில் ஜே.வி.பி.யின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பின்னணி: திசாநாயக்க முதியன்சேலாகே அனுர குமார திசாநாயக்க 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புதேகம கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கூலித்தொழிலாளி மற்றும் அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. மிகவும் எளிமையான குடும்பத்தில் இவர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications