கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்
தெஹ்ரான்: கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதையான, ஹர்முஸ் நீரிணை கடல் பகுதியில் ஈரான் கண்ணி வெடியை வைத்திருக்கிறது. இதனால் அமெரிக்கா பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என்று அந்நாட்டு செய்தி ஊடகமான 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' எச்சரித்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்டவற்றிற்கு வளைகுடா நாடுகளைதான் நம்பியிருக்கின்றன. இந்த நாடுகளிலிருந்து வரும் எரிபொருட்கள் ஹர்முஸ் நீரிணையை தாண்டிதான் வர வேண்டும். இந்த இடத்தில்தான் ஈரான் கண்ணி வெடிகளை வைத்திருக்கிறது.

கண்ணி வெடி வைத்த ஈரான்
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தி வருகின்றன. இப்படி இருக்கையில், இதற்கு எதிராக ஈரான் தீவிரமான பதில் அட்டாக்கை கையில் எடுத்திருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கும், அதன் நட்பு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் போக கூடாது என்பதில் ஈரான் உறுதியாக இருக்கிறது. நேரடியாக மோதினால் அமெரிக்காவை ஜெயிக்க முடியாத என்பது ஈரானுக்கு தெரியும். எனவேதான் சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்த முயன்று வருகிறது.
ஒரு சொட்டு கூட எடுக்க முடியாது
எனவே ஹர்முஸ் நீரிணையை தனது கண்ட்ரோலில் எடுத்திருக்கிறது. இது குறித்து 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "ஈரான் இதுவரை இல்லாத அளவில் கண்ணிவெடிகளை ஈரான் ஹர்முஸ் நீரிணையில் வைத்திருக்கிறது. இது தவிர ஈரானிடம் 2000-6000 வரை நவீன ரக கண்ணி வெடிகள் இருக்கலாம். எனவே ஹர்முஸ் நீரிணை என்பது மரண பள்ளத்தாக்காக மாறியிருக்கிறது. ஒரு சொட்டு கச்சா எண்ணெய்யை கூட இந்த வழியாக வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் வார்னிங் கொடுத்திருக்கிறது" என்று கூறியுள்ளது.
டிரம்புக்கு நெருக்கடி
அமெரிக்கா இந்த விஷயத்தில் ரொம்பவே டென்ஷன் ஆகியிருக்கிறது. காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வுதான். ஏற்கெனவே அமெரிக்காவில் பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை எக்குதப்பாக ஏறியிருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலையை அப்படியே பாதியாக குறைப்பேன் என்று டிரம்ப் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், இப்போது நடத்திருப்பதே வேறு. எனவே மக்களின் எதிர்ப்பை டிரம்ப் சம்பாதிப்பதற்குள் பிரச்சனையை ஸ்மூத்தாக முடிக்க வேண்டும்.
எரிபொருள் தட்டுப்பாடு
எனவே டிரம்ப் அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். "ஹர்முஸ் ஜலசந்தியில் வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை உடனே அகற்ற வேண்டும். இல்லை எனில், ஈரான் இதுவரை பார்க்காத ராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ளும்" என்று வார்னிங் கொடுத்திருக்கிறார். இதற்கெல்லம் ஈரான் அசைந்து கொடுக்கும் என்று தெரியவில்லை. போகிற போக்கை பார்த்தால், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஆட்டி படைக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி












Click it and Unblock the Notifications