இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! மக்கள் பீதி! சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
ஜகர்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 6.2 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு சுமத்ராவில் உள்ள பிஞாய் நகருக்கு 160 கிலோ மீட்டர் மேற்கே இந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. இதனால் முன்பு 2004 ஆம் ஆண்டு ஏற்பட்டது போல் சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளதோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்தனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படக்கூடிய ரிங்க் ஆஃப் பயர் என அழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையாகும்.
கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி அலைகள் தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில்தான் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்துதான் இந்த சுனாமி ஏற்பட்டது. இதனால், சுமத்ரா தீவு பகுதியில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications