"குதிரையில் வரும் பிசாசுகள்!" சாட்டிலைட்டில் போட்டோ முழுக்க பிணக்குவியல்கள் & ரத்த கறைகள்!
சூடான்: வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதில் ஆர்எஸ்எஃப் படைகள் மிக மோசமான தாக்குதலில் இறங்கியுள்ளது. அங்குள்ள ஒரு நகரில் சாட்டிலைட் படங்களிலேயே தெரியும் அளவுக்கு மிக கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. அங்கு பிணக்குவியல்களும் ரத்தக் கறையும் விண்வெளியில் இருந்து பார்த்தால் கூட தெரியும் அளவுக்கு இருக்கிறது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் இப்போது மோதல்கள் நடந்து வருகின்றன. மத்திய கிழக்கு பதற்றம், ரஷ்யா உக்ரைன் மோதல் எனப் பல விஷயங்களை இதற்கு நாம் உதாரணமாகச் சொல்லலாம். இந்த மோதல்களைக் கண்டிக்கும் உலக நாடுகள், இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

சூடான்
ஆனால், எப்போதுமே ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்படும் சண்டைகளும் மோதல்களும் உலக நாடுகளின் கவனத்திற்கே வராது. அப்படியே கவனத்திற்கு வந்தாலும் உலக நாடுகள் பெரிதாக அதற்குக் கவனம் செலுத்தாது. அப்படியொரு மிக மோசான நெருக்கடி தான் இப்போது சூடானில் ஏற்பட்டுள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள இந்த சூடானில் விண்வெளியில் இருந்து பார்த்தால் கூட தெரியும் அளவுக்கு அங்கு இனப்படுகொலை நடந்து வருகிறது. இருப்பினும், உலக நாடுகள் இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாட்டிலைட் படங்கள்
அங்கு வடக்கு டார்பூரில் உள்ள எல் ஃபாஷர் நகரத்தில் ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் குழு தான் இந்த கொடூரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். எல் ஃபாஷர் நகரில் எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்கள் இந்தக் கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அந்த சாட்டிலைட் படங்களில் மனிதச் சடலங்களைப் போல இருக்கும் குவியல்கள் தெரிகிறது. அதேபோல மற்றொரு இடத்தில் மிக பெரியளவுக்குச் சிவப்பு நிறத்தில் ரத்தம் இருப்பதும் தெரிகிறது.
கடந்த அக்டோபர் 27ம் தேதி ஏரோநாட்டிக் நிறுவனமான ஏர்பஸ் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் நிறுவனத்தின் சாட்டிலைட் தான் இந்தக் கொடூரத்தைப் படம் பிடித்திருக்கிறது. ஆர்எஸ்எஃப் எனப்படும் ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் இந்த நகரை ஆக்கிரமித்த பின்னர் எந்தளவுக்கு மிக மோசமான அடக்குமுறை அரங்கேறியுள்ளது என்பதற்கு ஆதாரமாக இது மாறியிருக்கிறது.
என்ன நடந்தது!
ஆர்எஸ்எஃப் படைகள் திட்டமிட்டு இந்தக் கொடூரத்தை அரங்கேறியுள்ளனர். அப்பகுதியில் பொதுமக்கள் இருப்பதைத் தெரிந்து கொண்டு அவர்கள் வெளியே வர முடியாத வகையில் தெருக்களைச் சுற்றி வாகனங்களை நிறுத்தியுள்ளனர். அப்பாவி மக்கள் இதனால் வேறு வழியில்லாமல் வெளியே வந்தபோது அவர்களைச் சுட்டுத் தள்ளியுள்ளனர். தப்பிக்க முயன்றோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த பிணக் குவியல்களே அங்கு இருக்கிறது. மேலும், அருகிலேயே ரத்தம் சிதறி சிவப்பு நிற கறைகளும் தெரிகிறது.
கடந்த 2023 ஏப்ரல் மாதம் சூடான் ஆயுதப் படைத் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் மற்றும் ஆர்எஸ்எஃப் அமைப்பின் தளபதி முகமது ஹம்டன் டகாலோ இடையே இந்த மோதல் தொடங்கியது. அதன் பிறகு அதிரடி தாக்குதலை ஆரம்பித்த ஆர்எஸ்எஃப் படைகள் சூடான் ஆயுதப் படையின் ராணுவத் தளங்களைத் தன்வசப்படுத்தியது.
குதிரைகளில் வரும் பிசாசு
இரு தரப்புமே போர்க் குற்றங்களைச் செய்துள்ளன. இருப்பினும் ஆர்எஸ்எஃப் போர்ஸ் கொடூரமான செயல்களைச் செய்துள்ளன. உண்மையில் இந்த கேங் 2000கள் முதலே இதுபோன்ற கொடூரங்களை நடத்தி வருகிறார்கள். அப்போது திடீரென ஒரு பகுதிக்குள் குதிரைகளில் வரும் இந்த வீரர்கள், ஆண்களைக் கொன்றுவிடுவார்கள். பெண்களைப் பலாத்காரம் செய்வார்கள். இதனால் உள்ளூர் மக்கள் "குதிரைகளில் வரும் பிசாசுகள்" என்றே இவர்களை அழைப்பார்களாம்.
இப்போது குதிரைகளுக்குப் பதிலாக கார்கள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தினாலும், இவர்களின் தாக்குதல் யுக்தி மாறவில்லை. இன ரீதியாகக் குறிவைத்து அரபு சமூகங்களைச் சேராதவர்களைத் தாக்குவார்கள். அரபு பெண்களை மற்ற பெண்களைப் பலாத்காரம் செய்வார்கள். பலாத்காரத்தையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் கேவலமான செயலையும் இந்த கேங் செய்கிறது. கேட்டால் "அரபு குழந்தைகளை உருவாக்குகிறோம்" என்று திமிராகவே சொல்வார்களாம்.












Click it and Unblock the Notifications