என் கை காச போட்டு சுனிதா வில்லியம்ஸுக் தருவேன்..எலான் மஸ்க் மட்டும் இல்லைனா? ட்ரம்ப் சொன்னதை பாருங்க
நியூயார்க்: விண்வெளியில் 286 நாட்கள் சிக்கி இருந்த விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் கடந்த புதன்கிழமை டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினர். இந்த நிலையில் கூடுதலாக அவர்கள் விண்வெளியில் இருந்ததற்கு ஊதியம் தரப்படவில்லை என்ற கேள்வி எழுந்த நிலையில் எனது சொந்த பாக்கெட்டில் இருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்குவேன் என கூறி இருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். மேலும் அவர்களை பூமிக்கு அழைத்து வந்ததற்கு எலான் மஸ்க்குக்கும் நன்றி தெரிவித்துள்ள டிரம்ப், அவர் இல்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் இரண்டாவது முறையாக விண்வெளிக்குச் சென்றார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்த அவர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உடனடியாக பூமிக்கு திரும்ப முடியவில்லை.
பத்து நாளில் திரும்புவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் விண்வெளியில் தங்கி இருந்தார். பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், ரஷ்யாவின் அலெக்சாண்டர் உள்ளிட்டோரை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் களம் இறங்கியது.

அந்த நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது. தொடர்ந்து கடந்த செவ்வாய்கிழமை காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் ஆகிய நான்கு பேரை அழைத்துக் கொண்டு டிராகன் விண்கலம் பூமியை நோக்கி வந்தது. தொடர்ந்து 17 மணி நேர பயணத்தை நிறைவு செய்து இந்திய நேரப்படி கடந்த புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு ப்ளோரிடா கடலில் இறங்கியது.
தொடர்ந்து ஸ்பேஸ் எக்ஸ் மீட்பு குழுவினர் விண்கலத்தில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை மீட்டு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து அவர்கள் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. விரைவில் அவர்கள் பொது வெளியில் தோன்ற இருக்கின்றனர்.
இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு கூடுதல் ஊதியம் தர வேண்டி இருந்தால் அதனை தனது சொந்த பாக்கெட்டிலிருந்து எடுத்து தருவேன் எனக் கூறியிருக்கிறார் டொனால்ட் டிரம்ப். இது தொடர்பாக பேசிய அவர் விண்வெளியில் கூடுதலாக பணி மேற்கொண்ட இரு விண்வெளி வீரர்களுக்கும் கூடுதல் ஊதியம் தரவில்லை என்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு கூடுதல் சம்பளம் தரவேண்டும் என்றால் எனது சொந்த பாக்கெட்டிலிருந்து தருவேன். அதே நேரத்தில் எலான் மஸ்கிஸ்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் மட்டும் நம்முடன் இல்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் ஃபிரீடம் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
எவ்வளவு சம்பளம்?" புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் போன்ற நாசா விண்வெளி வீரர்கள் அமெரிக்காவின் அரசு ஊழியர்களை போல வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அதே நேரத்தில் கூடுதல் நேரம் மற்றும் வார இறுதி நாட்களில் வேலை செய்தால் கூடுதல் ஊதியம் தரப்படுவதில்லை. நாசா சொன்ன தகவல் படி அவர்கள் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 52 ஆயிரம் டாலர் ஊதியமாக பெற்றிருக்கிறார்கள். அதே நேரத்தில் விண்வெளியில் அவர்கள் தங்கி இருந்த ஒரு நாளுக்கு ஐந்து டாலர் ஊதியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சுனிதா வில்லியம்ஸ்க்கு 1430 டாலர் கூடுதலாக பணம் செலுத்தப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications