'மேட்டர்' என்னன்னா.. இந்த பூமியில் 'வாட்டர்' இருக்க நிறைய வாய்ப்பிருக்காம்....!
டோக்கியோ: புதிய வானம்.. புதிய பூமி.. இந்த எம்.ஜி.ஆர் படப் பாடலை தற்போது டோக்கியோ பக்கம், ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் உற்சாகமாக பாட ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம், தண்ணீர் அதிகம் இருக்க வாய்ப்பு இருக்கக் கூடிய ஒரு பூமி போன்ற கிரகத்தை இவர்கள் கண்டுபிடித்துள்ளனராம்.
அம்மா மாதிரியே மனைவி வேண்டும் என்று தேடிய விநாயகர் கதையாக, பூமியைப் போலவே இன்னொரு பூமி எங்காவது இருக்கிறதா என்ற தேடலில் விஞ்ஞானிகள் நீண்ட காலமாகவே கண்களை விண்வெளியின் பக்கம் திருப்பிக் கொண்டிருக்கின்றனர்.
அவ்வப்போது பூமியைப் போல ஏதாவது கிரகங்கள் சிக்கத்தான் செய்கின்றன. ஆனால் அத்தனையும் தண்ணீர் தண்ணீர் படத்தில் வரும் அத்திப்பட்டி போல வறண்டதாகவே உள்ளன.
இந்த நிலையில், ஒரு சூப்பர் பூமி என்ற புதிய கிரகம் விஞ்ஞானிகளின் கண்களில் சிக்கியுள்ளது. சிக்கிய கிரகம், கண்களை பிரகாசப்படுத்தவும் செய்துள்ளது. காரணம், அங்கு நிறைய தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால்.

சுப்ரீம் கேம் பார்வையில்
ஜப்பான் விஞ்ஞானிகள் குழு ஒன்று, விண்வெளி ஆய்வுக்காக நிறுவியுள்ள சுபரு தொலைநோக்கியில் புதிதாக பொருத்தப்பட்ட சுப்ரீம் கேம் என்ற அதி நவீன கேமரா மற்றும் பெய்ன்ட் ஆப்ஜெக்ட் கேமரா ஸ்பெக்டோகிராப் Faint Object Camera Spectrograph (FOCAS) உபகரணங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பை வெளிக் கொணர்ந்துள்ளது.

சூப்பர் பூமி...
இந்த தொலைநோக்கியானது, ஜிஜே 1214 பி GJ 1214 B (Gilese 1214 b) என்ற பெயரில் அழைக்கப்படும் பூமியைப் போன்ற ஒரு சூப்பர் பூமியை ஆய்வு செய்துள்ளது.

பூமியை விட பல மடங்கு பெரியது...
சூப்பர் எர்த் என்பது பூமியை விட பல மடங்கு எடையுடன் கூடிய மாபெரும் கிரகமாகும். அதேசமயம் மகா சைஸிலான ஜூபிடரை விட எடையில் சிறியவைதான்.

பூமி மாதிரியா அல்லது நெப்ட்யூன் போலவா...
இப்படி சூப்பர் எர்த் என்று அழைக்கப்படும் கிரகங்கள் நிறைய இருந்தாலும் உண்மையில் இவை பூமியைப் போலத்தானா அல்லது நெப்ட்யூன் போலவா என்ற சந்தேகமும் இன்னும் இருந்துகொண்டுதான் உள்ளன.

ஆனால் தண்ணீர் இருக்கலாமாம்...
இந்தப் பின்னணியில்தான், ஜிஜே 1214 பி என்று பெயரிடப்பட்டுள்ள சூப்பர் பூமியின் தன்மை குறித்த புதிய தகவல்களை ஜப்பான் குழு வெளியிட்டுள்ளது. அதாவது இந்த சூப்பர் பூமியில், தண்ணீர் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாக இக்குழு கூறுகிறது. நீல நிற ஒளிக்கற்றை பில்டர் மூலம் அந்த சூப்பர் பூமியின் தன்மையை தாங்கள் ஆய்வு செய்ததாக ஜப்பான் குழு கூறுகிறது.

தண்ணீர் அல்லது ஹைட்ரஜன் இருக்கலாம்
இந்த ஆய்வின் முடிவாக அவர்கள் சொல்வது என்னவென்றால் அந்த சூப்பர் பூமியில் ஒன்று தண்ணீர் அதிக அளவில் இருக்கலாம். அல்லது ஹைட்ரஜன் வாயு அதிக அளவில் இருக்கலாம் என்பதே. மேலும் மேகக் கூட்டம் இருக்கக் கூடும் என்றும் இந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

உறுதிப்படுத்தப்படவில்லை
இந்த ஆய்வின் முடிவு இன்னும் முற்றுப் பெறவில்லை. தொடர்கிறது. இதன் இறுதியில் ஏதாவது சாதகமான, சந்தோஷமான செய்திக்காக உலக விஞ்ஞானிகள் ஆவலோடு காத்திருக்கின்றனர்...
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications