காதலியை சுனாமிக்கு பறிகொடுத்தவரின் சோக குரல்

Subscribe to Oneindia Tamil

பாங்காங்: ஒன்றாக இருந்த காதலியை சுனாமி கோரத்தாண்டவத்துக்கு பலி கொடுத்துவிட்டு உடல் கூட கிடைக்காமல் சோக அலைகளை நினைவு கூறுகிறார் ஆன்டிசாகர் என்ற வெளிநாட்டு சுற்றுலா பயணி.

தாய்லாந்து நாட்டின் கடலோர பகுதியான காவோலாக் என்ற சுற்றுலா தலத்தில் உள்ள பீச் பங்களாவில் தனது காதலி நோவா மில்ஸ் உடன் வந்து தங்கியிருந்தார் அன்டிசாகர். 2004ம் ஆண்டு, டிசம்பர் 26ம்தேதி சுழன்றடித்த சுனாமியின்போது நடந்த சம்பவங்களை அவர் இந்த வீடியோவில் விவரிக்கிறார்:

Survivor recounts horror of 2004 tsunami

திடீரென கட்டிடமே ஆடுவதை போல உணர்ந்தேன். ஜெட் விமானத்தில் இருந்து கிளம்பும் சத்தத்தை போல மிகப்பெரிய இரைச்சல் என் செவிப்பறையை கிழித்தது. கடல் அலையில் இருந்து எழுந்த சத்தம் என்பதை அறிந்தபோது பெரும் ஆச்சரியமும், அச்சமும் அடைந்தேன்.

எங்கள் பில்டிங்கிற்குள் தண்ணீர் புகுந்த தருணத்துக்கு பிறகு நான் நோவா மில்சை இதுவரை பார்க்கவில்லை, என்று சொல்லும்போதே ஆன்டிசாகருக்கு முகத்தில் சோகம் பரவியது.

இந்த சம்பவத்தின்போது அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஆன்டி, கட்டிடங்களுக்குள் மோதி, படுகாயமடைந்தார். 7 வாரங்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை அவருக்கு. பல்வேறு அறுவை சிகிச்சைகளும் அவரது காலுக்கு செய்யப்பட்டன. இருப்பினும் 2005ம் ஆண்டு அதே தாய்லாந்துக்கு ஆன்டிசாகர் சென்றார். ஆனால் உல்லாசம் அனுபவிக்க கிடையாது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதற்காக தன்னால் ஆன முயற்சிகளை அவர் செய்தார்.

ஒருவழியாக அதிர்ச்சியில் இருந்து மீண்ட ஆன்டிசாகர், 2012ல் எம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இப்போது தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வதாக கூறுயுள்ளார் ஆன்டிசாகர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+