For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியாவில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் கைது- இலங்கைக்கு நாடு கடத்தல்!!

By Mathi
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க நிதி திரட்டியதாக அதன் முக்கிய தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மவுனிக்க செய்தனர். இதன் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பாடுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

Suspected senior LTTE member arrested in Malaysia

அதே நேரத்தில் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பட்டு வருவதாக இலங்கை அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் மலேசியாவின் கோலாலம்பூரில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டியதாக 37 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவர் 2012ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் வசித்து வந்தார். தற்போது அவரை மலேசிய அரசு உடனே இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.

English summary
A Sri Lankan man, believed to be a senior member of terrorist group Liberation Tigers of Tamil Eelam (LTTE) has been arrested by the police in a special raid in Kuala Lampur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X