For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்ரேலில் பயங்கரம்.. சுதந்திர விழாவில் திடீர்னு புகுந்த 2 பேர்.. சரமாரி கத்திகுத்தில் 3 பேர் பலி

இஸ்ரேல் சுதந்திர விழா கொண்டாட்டத்தில் 3 பேர் கத்தியால் குத்தப்பட்டு கொலை

Google Oneindia Tamil News

ஜெருசலேம்: இஸ்ரேல் சுதந்திர விழா கொண்டாட்டத்தின்போது, மர்மநபர்கள் உள்ளே நுழைந்து திடீர் கத்திகுத்து தாக்குதல் நடத்தினர்.. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இஸ்ரேலின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது.. வழக்கமாக இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதி இல்லத்தில் இந்த விழா வருடா வருடம் நடப்பது வழக்கம்.

அந்த வகையில் சுதந்திர தின நிகழ்ச்சி காலை சுமார் 9:30 மணியளவில் ஆரம்பமானது... அந்நாட்டு, தலைவர்கள், படை வீரர்களுக்கு அப்போது சிறப்பு பாராட்டுகள் வழங்கப்பட்டன.

 திடீரென.. இஸ்ரேல் பிரதமருக்கு போன் போட்ட பிரதமர் மோடி... என்ன விஷயம்? திடீரென.. இஸ்ரேல் பிரதமருக்கு போன் போட்ட பிரதமர் மோடி... என்ன விஷயம்?

 போட்டோக்கள்

போட்டோக்கள்

இதில், ஐடிஎஃப் (IDF) தலைமை அதிகாரியான அவிவ் கோஹாவி, இப்போதுள்ள மற்றும் முன்னாள் மூத்த ராணுவ பிரமுகர்கள் போன்றோர் பங்கேற்றனர்.. ஹெர்சாக் அதிபரான பின்பு, நடக்கும் முதல் சுதந்திர தின விழா இதுவாகும்.. ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு தலைமைத் தளபதியான அவிவ் கோஹாவி நன்றி கூறினார்... மேலும், ஜனாதிபதி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் சிப்பாய்களின் போட்டோக்களை ஒவ்வொன்றாக வெளியிட்டார்.

அருங்காட்சியகம்

அருங்காட்சியகம்

சுதந்திர தின நிகழ்வுகள் ஜெருசலேமில் இருக்கும் மவுண்ட் ஹெர்ஸில் அதிகாரப்பூர்வ ஜோதி-ஒளி விழாவில் ஆரம்பித்து தொடர்கிறது.. ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் நாள் முழுக்க தேசிய பூங்காக்களையும், அருங்காட்சியகங்களையும் பார்வையிடுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.. இந்நிலையில்தான், அந்த வன்முறை சம்பவம் நடந்துள்ளது.. டெல் அவிவ் நகரில் பெரும் திரளாக கூடியிருந்த கூட்டத்தில் மர்ம நபர்கள் 2 பேர் திடீரென நுழைந்துவிட்டனர்.

 3 பேர் பலி - 3 பேர் காயம்

3 பேர் பலி - 3 பேர் காயம்

கையில் கத்தியுடன் நுழைந்த அவர்கள், கண்ணில் பட்ட நபர்களை எல்லாம் சரமாரியாக குத்த தொடங்கினர்.. இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.. மேலும் 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர்.. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...

மர்மநபர்கள்

மர்மநபர்கள்

ஆனால், யார் அந்த 2 பேர் என்று தெரியவில்லை.. எதற்காக கத்தியுடன் கூட்டத்தில் புகுந்தனர் என்றும் தெரியவில்லை.. அதனால், தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடும் பணிகளை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.. நடந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் சொல்லும்போது, பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் சரி, அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்கள் யாராக இருந்தாலும், விரைவில் பிடிப்போம்.. அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆவார்கள்" என்றார்.

English summary
suspected terrorist attack in israel kills at Least 3 on independence day and 3 serious இஸ்ரேல் சுதந்திர விழா கொண்டாட்டத்தில் 3 பேர் கத்தியால் குத்தப்பட்டு கொலை
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X