மதத்தை பரப்ப மனைவிகளை மாற்றிக்கொள்ளும் தம்பதி! அமெரிக்காவில் இப்படியும் ஒரு அக்கப்போர்!!

Subscribe to Oneindia Tamil

புளோரிடா: மனைவி, கணவன்களை மாற்றி ஸ்விங் செக்ஸ் வைத்துக் கொண்டு அமெரிக்காவில் கிறிஸ்தவ மதத்தை பரப்பி வருகின்றனர் ஒரு தம்பதியினர்.

புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் கிறிஸ்டி (44). இவரது கணவன் டீன் பராவே (50). கிறிஸ்டிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருந்த நிலையில் 8 வருடங்கள் முன்பாக டேட்டிங் வெப்சைட் மூலமாக கிறிஸ்டியை அறிமுகம் செய்து கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Swinging towards God! Christian couple spread the word about religion via their WIFE-SWAPPING network

வெப்சைட் உருவாக்கம்

இருவருமே கிறிஸ்தவ மதத்தின் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டவர்கள். மதத்தின் கருத்துக்களை எடுத்துச் சொல்ல கிறிஸ்டி பிறர் கணவன்களுடனும், டீன் பராவே பிற ஆண்களின் மனைவிகளுடனும் செக்ஸ் வைத்துக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுபோல கணவன், மனைவியை மாற்றிக்கொள்ள FitnessSwingers.com என்ற வெப்சைட்டையும் நடத்தி வருகிறது இந்த தம்பதி.

கடவுள் மகிழ்ச்சியாக இருக்கச்சொன்னார்

இதுபற்றி கிறிஸ்டி கூறுகையில், "நாங்கள் இப்படி செக்ஸ் வைத்துக்கொள்வதை பாவமாக நினைக்கவில்லை. கடவுள் இந்த பூமிக்கு மகிழ்ச்சியாக இருக்கவே அனுப்பி வைத்துள்ளார். எனவே கடவுள் எங்களோடு எப்போதும் இருக்கிறார் என்று உணர்கிறேன்" என்றார் மகிழ்ச்சியோடு.

தண்டனை குறைப்பால் மதத்தில் தீவிரம்

டீன் பராவே ஒரு காலத்தில் மிகவும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்துள்ளார். குடி போதையில் வாகனம் ஓட்டி ஐந்தாவது முறையாக போலீசாரிடம் சிக்கியபோது 10 வருடம் சிறை தண்டனை கிடைக்கும் என்று நினைத்தாராம், காப்பாற்றும்படி ஏசுநாதரிடம் வேண்டினாராம் டீன். வழக்கில், 10 மாதங்கள் மட்டுமே சிறை தண்டனை கிடைத்ததால் குடியை குறைத்து, கிறிஸ்தவத்தில் தீவிரமாகிவிட்டாராம்.

தினமும் இரண்டு முறை திகட்ட.. திகட்ட

கிறிஸ்டி கூறுகையில், நான் செக்ஸ் வைத்துக்கொள்வதில் அலாதி பிரியம் கொண்டவள். முதல் கணவன் என்னை பட்டினி போட்டுவிட்டார். இப்போது நாளுக்கு இருமுறை திருப்தியாக டீன் என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்கிறார். இதுதவிர பிற பெண்களின் கணவன்களுடனும் அவ்வப்போது செக்ஸ் வைத்துக்கொள்வதால் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது.

நெருங்கி பழக நல்ல வழி

இரு ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்விங் செய்யும் வெப்சைட்டை துவக்கிய இந்த தம்பதி, அதில் வரவேற்கும் தம்பதிகளை தேடி சென்று திருப்தி செய்கிறது. கிறிஸ்டி இதுகுறித்து கூறுகையில், ஒருவருடன் நெருங்கி பழக செக்ஸ் நல்ல வழி. எனவேதான் செக்ஸ் வைத்துக் கொண்டு அந்த தம்பதிகளுக்கு மதத்தை படித்துக் கொடுக்கிறோம் என்றாரே பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+