நொடி பொழுதில் பரவிய தீ.. ஸ்விட்சர்லாந்து பார் விபத்தில் நடந்தது என்ன..தப்பித்தவர்கள் அதிர்ச்சி தகவல்
பெர்ன்: ஸ்விட்சர்லாந்து நாட்டில் பிரபல ரிசார்ட்டில் உள்ள பாரில் புத்தாண்டு கொண்டாட்டம் பெரும் துக்கமாக மாறியுள்ளது. கடுமையான தீ விபத்து ஏற்பட்டு 47 மக்கள் உயிரிழந்தனர். சுமார் 115க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தப்பித்த மக்கள், அங்கு கோரத்தை பற்றி பகிர்ந்துள்ள தகவல்கள் பதைபதைக்க வைக்கிறது.
உலகம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று உற்சாகத்துடன் 2026 புத்தாண்டை வரவேற்று கொண்டிருந்தன. ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள பாரில் நள்ளிரவு பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. 2026 ஆம் ஆண்டின் முதல் நாளே அந்த நாட்டின் கறுப்பு நாளாக அமைந்துவிட்டது.

ஸ்விட்சர்லாந்து பார் தீ விபத்து
ஸ்விட்சர்லாந்து நாட்டின் வலைஸ் கான்டன் பகுதியில் உள்ள ஆல்பைன் ரிசார்ட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு மது, உணவு, ஆடல், பாடல் என்று பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் உற்சாக மிகுதியில் இருந்தபோதுதான் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.
திடீரென அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தற்போதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து ஸ்விட்சர்லாந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது அந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
5 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
இதுகுறித்து ஸ்விட்சர்லாந்து காவல்துறையினர் கூறுகையில், பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு தீ நாலாபக்கமும் பரவியுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விபத்து பகுதியில் இருந்து செல்போன்கள் மீட்கப்பட்டு ஆய்வு செய்து வருகிறோம். விபத்து நடைபெற்றதற்கான காரணம் பற்றி தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது. என்றனர்.
கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சிலர் வெளிநாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த மக்களுக்கு 5 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ஸ்விட்சர்லாந்து அரசு கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் அண்டை நாடுகளும் ஸ்விட்சர்லாந்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.
30 நொடியில் 200 பேர்
இதுகுறித்து வெடி விபத்தில் தப்பித்தவர்கள் கூறுகையில், "ரிசார்ட் பாரின் தரை தளத்தில்தான் அதிகமான மக்கள் இருந்தனர். அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கண் இமைப்பதற்குள் தீ வேகமாக பரவியது. 30 நொடியில் 200க்கும் மேற்பட்டோர் தப்பிக்க முயற்சி செய்தோம். பார் முழுவதும் மரப்பலகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சீலிங் அருகிலேயே பாட்டில்களில் மெழுகுவர்த்தி வைத்து அலங்கரித்திருந்தனர்.
சிறிது நேரத்தில் சீலிங் முழுவதும் தீப்பற்றி, வேகமாக பரவியது. இதில் முதல் தளத்திலும் தீ பற்றியது. வெளியேறும் வழி, படிக்கட்டு ஆகியவை மிகவும் குறுகலாக இருந்தது. அடர்த்தியான புகை இருந்ததால் அங்கிருந்து வெளியேறுவது மிகவும் கடினமாக இருந்தது. சுவாசிப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. சிலர் ஜன்னல்களை உடைத்து வெளியேறினோம். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை." என்றனர்.
அந்த பாருக்கு வெளியே இருந்தவர்கள், "இந்த சம்பவம் ஹாரர் படத்தை விட கொடுமையாக இருந்தது. கடுமையான தீ மற்றும் புகை பரவியதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வெளியேறினார்கள்." என்று கூறியுள்ளனர். இந்த தீ விபத்தின் வீடியோக்களும் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications