Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கையில் ஆயுதம் இல்லை.. ஆனாலும் துப்பாக்கி சூடு நடத்திய நபர் முன் நின்ற துணிச்சல்! யார் இந்த அல் அகமது

Subscribe to Oneindia Tamil

கான்பரா: சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் மிக மோசமான ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டபோது ஆயுதம் எதுவும் இல்லாமல் அவரை அகமது என்பவர் காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. யார் அந்த அகமது.. அவர் என்ன செய்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிக மோசமான ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. அங்கு யூத நிகழ்ச்சி ஒன்று நடந்த நிலையில், உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 12 பேர் உயிரிழந்தனர்.

Sydney Bondi Beach Shooting Hero Ahmed Al-Ahmed the Unarmed Bystander Who Disarmed the Gunman

துணிச்சல்

இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலின்போது, ஒரு நபர் துணிச்சலுடன் செயல்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவரை எதிர்கொண்டார். பார்கிங் அருகே நின்று அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இருந்தார். அப்போது காரின் பின்னால் ஒளிந்து கொண்டே அருகே வந்த அவர், மர்ம நபர் மீது பாய்ந்து துப்பாக்கியைப் பறித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மர்ம நபரை எதிர்த்து துணிச்சலாகப் போராடிய அந்த நபர் 43 வயதான அகமது அல் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்காகப் பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவில் சமீப காலங்களில் நடந்த மோசமான தாக்குதல் இதுவாகும். அகமது மட்டும் சரியான நேரத்தைத் துப்பாக்கியைப் பறிக்கவில்லை என்றால் உயிரிழப்புகள் மேலும் அதிகரித்து இருக்கும்.

திக்திக்

சமூக வலைத்தளங்களில் பரவும் அந்த 15 விநாடி வீடியோவில் கையில் எந்தவொரு ஆயுதங்களும் இல்லாத அகமது, கார்களுக்குப் பின்னால் மறைந்து கொள்கிறார். பிறகு சட்டென துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை நோக்கி ஓடிச் செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. மர்ம நபரின் கழுத்தைப் பிடித்து, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பிடுங்கி, அவரைக் கீழே தள்ளி, பின்னர் அதே துப்பாக்கியை அவரை நோக்கிக் குறி வைப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த அகமது ஒரு பழ வியாபாரியாம். அவர் இதற்கு முன்பு துப்பாக்கியைக் கையாண்டது இல்லை. அந்த வழியாக வாக்கிங் சென்றபோது தான் துப்பாக்கிச் சூடு நடப்பதைப் பார்த்துள்ளார். உடனடியாகக் களத்தில் இறங்கி துப்பாக்கியைப் பிடுங்கியுள்ளார். இந்தத் தாக்குதலின்போது அகமது மீதும் இரு குண்டுகள் பாய்ந்துள்ளன. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஹீரோ

இது தொடர்பாக அகமதின் உறவினர் முஸ்தபா கூறுகையில், "அவர் மருத்துவமனையில் உள்ளார்.. அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மோசமான காயங்கள் எதுவும் இல்லை என நினைக்கிறோம். அவர் உண்மையாகவே ஹீரோ" என்று தெரிவித்தார். அவரது துணிச்சலுக்கும், துரிதச் செயலுக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூட அவரை "ஹீரோ" என்று பாராட்டினார்.

விசாரணை

இந்தச் சம்பவத்தில் இருவர் ஈடுபட்டதை போலீசார் உறுதி செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.. மற்றவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அருகிலிருந்த வாகனத்தில் வெடிபொருட்களும் இருந்த நிலையில், அதை அதிகாரிகள் பத்திரமாக அகற்றினர். இந்தத் தாக்குதல் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+