சிரியாவில் வான்வழித் தாக்குதல்.. 5 பிஞ்சு குழந்தைகள் உட்பட 17 பேர் பலி
சிரியா வான்வழி தாக்குதலில் 17 பேர் பலியாகி உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் அரசு படைகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவின் டெர்ரா நகரத்தில் இன்று அரசு படைகள் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தியது. அரசு படைகளுக்கு உதவியான ரஷ்யா போர் விமானமும் சரமாரியாக குண்டுகளை குடியிருப்புகள் மீது வீசின.

இத்தாக்குதலில் மொத்தம் 17 பேர் பலியாகி உள்ளனர். இதில் 5 பேர் பிஞ்சு குழந்தைகள் என தெரியவந்துள்ளது.

கடந்த 10- நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தாக்குதல்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications