வேலையை காட்டிய இஸ்ரேல்.. சிரியாவில் கவிழ்ந்த ஆட்சி.. சைடு கேப்பில் உள்ளே நுழைந்த இஸ்ரேல் படை
டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் ஆசாத் ஆட்சி கவிழ்ந்து உள்ள நிலையில் இஸ்ரேல் சிரியாவை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. சிரியாவின் முக்கியமான மலைப்பகுதிகளான கோலன் குன்று பகுதியை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
1974 இல் சிரியாவுடனான போர்நிறுத்த உடன்படிக்கையின் போது கோலன் மலைப்பகுதிகள் சிரியா வசம் வந்தது. சிரியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த குன்று பகுதிகள் தற்போது இஸ்ரேல் வசம் வந்துள்ளது. சிரியா ஆட்சி கவிழ்ந்ததை பயன்படுத்தி இஸ்ரேல் அந்த பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

50 வருடமாக நிலவி வந்த.. சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கே ஆட்சி கவிழ ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்ற போராளி குழுதான் காரணம்.
அல் கொய்தாவில் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி என்பவரால் HTS உருவாக்கப்பட்டது. போராளி குழுக்களிடம் சரண் அடையும்படி வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 50 வருட ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சிரியாவில் இருந்து அதிபர் பஷர் அல் ஆசாத் விமானத்தில் ரகசியமாக ரஷ்யாவிற்கு தப்பி ஓடிவிட்டார்.
ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்ற குழுதான் அங்கே பிரதானமாக அரசுக்கு எதிராக போராடி வந்தது. சிரியாவில் அரசுக்கு எதிராக பல குழுக்கள் போராடி வந்தன . அந்த குழுக்களில் மிகவும் முக்கியமான மற்றும் வலிமையான குழு HTS ஆகும். இது லெவண்ட் விடுதலைக்கான அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக அல் கொய்தா போராடியது பலருக்கும் தெரியும். அந்த அல் கொய்தாவில் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி என்பவரால் HTS உருவாக்கப்பட்டது. இப்போது அந்த குழு சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக அங்கே கிளர்ச்சி செய்தது. இப்போது அங்கே ஆட்சியையே தூக்கி வீசி உள்ளது.
அபு முகமது அல்-ஜோலானி அல் கொய்தாவின் சிரிய துணை அமைப்பான ஜபத் அல்-நுஸ்ராவை என்ற அமைப்பை நடத்தி வந்தார். 2016 இல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் ஏற்பட்ட கருத்தியல் வேறுபாடுகள் காரணமாக ஜோலானி 2017 HTS அமைப்பை உருவாக்கினார்.
சிரியாவில் அந்நாட்டு அரசுக்கு எதிராக பல அமைப்புகள், போராளிகள் போராடி வருகின்றன. அங்கே அரசுக்கு எதிராக பல போராளி குழுக்கள் குழு குழுவாக போராடி வருகின்றன. அதில் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) அமைப்பின் தலைமையின் கீழ் கிட்டத்தட்ட 10 குழுக்கள் போராடி வருகின்றன. இந்த ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) குழுக்கள்தான் அங்கே சிரியாவை கைப்பற்றி உள்ளது.
கடந்த நவம்பர் 27ம் தேதிதான் இவர்கள் அரசுக்கு எதிரான போரை அறிவித்தனர். கிட்டத்தட்ட 10 நாட்களுக்குள் இவர்கள் அங்கே முக்கியமான நகரங்களை கைப்பற்றி உள்ளனர். HTS மூத்த தளபதி லெப்டினன்ட் கர்னல். ஹசன் அப்துல்-கானி இது தொடர்பாக கூறுகையில், எங்கள் நடவடிக்கைகள் டமாஸ்கஸின் வீழ்ச்சியை உறுதி செய்யும். நாங்கள் செல்கிற வழியில் இருக்கும் பிணைக்கைதிகள், அரசு
இத்தனை காலம் அடைத்து வைத்து இருந்த கைதிகளை எல்லாம் விடுதலை செய்து வருகிறோம், என்றுள்ளார்.
இப்படி சிரியாவில் அதிபர் ஆசாத் ஆட்சி கவிழ்ந்து உள்ள நிலையில் இஸ்ரேல் சிரியாவை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. சிரியாவின் முக்கியமான மலைப்பகுதிகளான கோலன் குன்று பகுதியை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications