சிரியாவில் கவிழ்கிறது ஆட்சி? தலைநகரை சுற்றி வளைத்த போராளி குழுக்கள்.. அதிபர் ஆசாத் ஓட்டம்?
டமாஸ்கஸ்: சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக அங்கே கிளர்ச்சி படைகள் வெகுண்டெழுந்து போராடி உள்ளன. அந்நாட்டு தலைநகர் டமாஸ்கஸ் உள்ளே செல்ல தொடங்கிவிட்டதாகவும் விரைவில் தலைநகரை கட்டுப்பாட்டிற்குள் எடுப்போம் என்றும் எச்டிஎஸ் போராளி குழுக்கள் தெரிவித்து உள்ளனர். வரிசையாக நாட்டின் முக்கியமான நகரங்களை எச்டிஎஸ் போராளி குழுக்கள் கைதட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் இப்போது ரகசிய இடத்திற்கு சென்றுவிட்டார்.. ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்துவிட்டார் என்று செய்திகள் வருகின்றனர். தலைநகர் சுற்றி வளைக்கப்பட்டதால் அவர் தலைநகரை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்ற குழுதான் அங்கே பிரதானமாக அரசுக்கு எதிராக போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கு எதிராக பல குழுக்கள் போராடி வருகின்றன. அந்த குழுக்களில் மிகவும் முக்கியமான மற்றும் வலிமையான குழு HTS ஆகும். இது லெவண்ட் விடுதலைக்கான அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக அல் கொய்தா போராடியது பலருக்கும் தெரியும். அந்த அல் கொய்தாவில் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி என்பவரால் HTS உருவாக்கப்பட்டது. இப்போது அந்த குழு சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக அங்கே கிளர்ச்சி செய்துள்ளது. கிட்டத்தட்ட அங்கே ஆட்சியையே தூக்கி வீசும் நிலைமை ஏற்பட்டு உள்ளது.
அபு முகமது அல்-ஜோலானி அல் கொய்தாவின் சிரிய துணை அமைப்பான ஜபத் அல்-நுஸ்ராவை என்ற அமைப்பை நடத்தி வந்தார். 2016 இல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் ஏற்பட்ட கருத்தியல் வேறுபாடுகள் காரணமாக ஜோலானி 2017 HTS அமைப்பை உருவாக்கினார்.
சிரியாவில் அந்நாட்டு அரசுக்கு எதிராக பல அமைப்புகள், போராளிகள் போராடி வருகின்றன. அங்கே அரசுக்கு எதிராக பல போராளி குழுக்கள் குழு குழுவாக போராடி வருகின்றன. அதில் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) அமைப்பின் தலைமையின் கீழ் கிட்டத்தட்ட 10 குழுக்கள் போராடி வருகின்றன. இந்த ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) குழுக்கள்தான் அங்கே சிரியாவை கைப்பற்ற தொடங்கி உள்ளன.
ஈராக், ஜோர்டான் மற்றும் லெபனான் எல்லையில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய மாகாணமான ஹோம்ஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற போராளிக் குழு சனிக்கிழமை கூறியது.
கடந்த நவம்பர் 27ம் தேதிதான் இவர்கள் அரசுக்கு எதிரான போரை அறிவித்தனர். கிட்டத்தட்ட 10 நாட்களுக்குள் இவர்கள் அங்கே முக்கியமான நகரங்களை கைப்பற்றி உள்ளனர். HTS மூத்த தளபதி லெப்டினன்ட் கர்னல். ஹசன் அப்துல்-கானி இது தொடர்பாக கூறுகையில், எங்கள் நடவடிக்கைகள் டமாஸ்கஸின் வீழ்ச்சியை உறுதி செய்யும். நாங்கள் செல்கிற வழியில் இருக்கும் பிணைக்கைதிகள், அரசு
இத்தனை காலம் அடைத்து வைத்து இருந்த கைதிகளை எல்லாம் விடுதலை செய்து வருகிறோம்.
அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிராமங்களை கைப்பற்றி வருகிறோம். ஸ்வீடா, குனீட்ரா மற்றும் தரா ஆகிய இடங்களை 24 மணி நேரத்திற்குள் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டோம். இப்போது தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்ற உள்ளோம். உள்ளே புகுந்துவிட்டோம். தலைநகரை சுற்றி வளைத்துவிட்டோம் என்று அவர் கூறி உள்ளார்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) போராளிக் குழு அங்கே வெற்றியை நோக்கி விரைந்து வருகிறது.












Click it and Unblock the Notifications