5,11,271 பேரின் உயிரை கொன்ற குடும்ப ஆட்சி! அதிபரை ஓட விட்ட போராளி குழு! சிரியாவில் வெடித்த புரட்சி
டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கே போராளி குழுக்கள் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்நாட்டு தலைநகர் டமாஸ்கஸ் உள்ளே செல்ல தொடங்கிவிட்டதாகவும் விரைவில் தலைநகரை கட்டுப்பாட்டிற்குள் எடுப்போம் என்றும் எச்டிஎஸ் போராளி குழுக்கள் தெரிவித்து உள்ளனர்.
ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்ற குழுதான் அங்கே பிரதானமாக அரசுக்கு எதிராக போராடி வருகிறது. வரிசையாக நாட்டின் முக்கியமான நகரங்களை எச்டிஎஸ் போராளி குழுக்கள் கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அங்கே இவர்கள் தலைநகரை கைப்பற்றி விட்டனர்.. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் இப்போது ரகசிய இடத்திற்கு சென்றுவிட்டார்.. ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்துவிட்டார் என்று செய்திகள் வருகின்றனர்.

போரின் பின்னணி: சிரியாவில் நடக்கும் போருக்கு அங்கு நடக்கும் குடும்ப ஆட்சியும் முக்கிய காரணம் ஆகும். 2012ல் தான் இந்த போர் உக்கிரமாக நடக்க ஆரம்பித்தது. தற்போது மீண்டும் உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. இந்தியாவை போலவே சிரியாவுக்கு பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது. ஆனால் 1936ல் அந்த நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது. 1946ல் இரண்டாம் உலகப் போர் காரணமாக அந்த நாடு சுதந்திரம் பெற்றது. அதன்பின் 1950 வரை நிலையில்லாத ஆட்சிகள் நடந்து வந்தது.
அதன்பின் 1960 தொடக்கத்தில் அங்கு ஒற்றை ஆட்சி முறை வழக்கத்திற்கு வந்தது. ஹபீஸ் அல் அசாத் ஆட்சியில் நிலையாக உட்கார்ந்தார். மற்ற எதிர்க்கட்சிகள் கலைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ராணுவ ஆட்சி போல அவர் நடத்தி வந்தார். அப்போது ஆட்சிக்கு எதிராக கலக குரல்கள் வந்து கொண்டு இருந்தது.
ஹபீஸ் அல் அசாத் அவ்வப்போது கொஞ்சம் நன்றாகவே நடந்து கொண்டார். அவர் ஷியா பிரிவை சேர்ந்தவர். ஆனால் அங்கு 90 சதவிகித மக்கள் சன்னி. அரசின் முக்கிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்புகளில் ஷியா மக்கள் இருந்தார்கள். ஆனால் அதற்கு அடுத்தகட்ட பொறுப்புகளில் சன்னி மக்கள் இருந்தார்கள்.
அப்போது 1998 தொடக்கத்தில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே அவரது தம்பி ரிபாத்தை ஆட்சியில் அமர வைக்க முயற்சி செய்தார். ஆனால் ரிபாத் 1983ல் அரசுக்கு எதிராக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நாடு கடத்தப்பட்டார். பின் ஹபீஸின் முதல் மகன் பஸால் ஆட்சியில் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
விதியின் குரூரம் இங்குதான் விளையாடியது. பதவி ஏற்க இருக்கும் சில நாட்களுக்கு முன் பஸால் கார் விபத்தில் மரணம் அடைந்தார். மீதம் இருந்தது பஷர் அல் ஆசாத் மட்டுமே. பஷர் அல் ஆசாத்திற்கு அரசியல் குறித்து ஒன்றும் தெரியாது. நன்றாக படித்தவர் என்றாலும் அரசியலில் எந்த அறிவும் இல்லை. அதிலும் இளைஞர் அவர்!
ஹபீஸ் 2000ல் மரணம் அடைந்தார். அப்போதுதான் சரியா பஷர் அல் ஆசாத் அதிபராக பதவி ஏற்றார். படித்த இளம் நபர் ஆட்சிக்கு வருகிறார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் எதிர்காலம் அவர்களுக்கு வேறு விதமான திட்டங்களோடு காத்து இருந்தது. வந்தது சன்னி ஷியா பிரச்சனையை உருவாக்கினார். இரண்டாம் கட்ட இடத்தில் இருந்த சன்னி மக்கள் முற்றிலும் அகற்றப்பட்டார்கள். அரசின் அனைத்து பிரிவில் ஷியா மக்கள் அமர்த்தப்பட்டார். ஆசை ஆசையாக காத்து இருந்த மக்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.
அப்பா 30 வருடம் ஆசை தீர ஆண்டு மரணம் அடைந்தார். மகன் 26 வருடமாக ஆட்சி செய்து வருகிறார். இந்த 56 வருடங்களில் யாருக்கும் வேலை இல்லை. சரியான மருத்துவம் இல்லை. உணவு இல்லை என்று மூன்றாம் தர நாடாக சிரியா மாறி இருந்தது.
இதை எதிர்த்துதான் போர் தொடங்கியது. உலக நாடுகள் அதிபருக்கு உதவியாக வந்தது. துபாய் போன்ற நாடுகள் போராளி குழுக்களுக்கு உதவியாக இருக்கிறது. இந்த போர் முடியும் என்பதற்காக எந்த அறிகுறியும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.
இந்த போரில் இதுவரை 5,11,271 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். ஆனால் இன்னும் பலரின் மரணம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. இது 6 லட்சத்தை தாண்டும் என்று ஐநா அமைப்பு கூறியுள்ளது. பஷர் அல் ஆசாத் பிறந்த ஊரில் தான் இப்போது போர் உச்சம் அடைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications