2 லட்சம் இந்தியர்களுக்கு வேலை.. இந்தியாவை நம்பி நிற்கும் தைவான், இஸ்ரேல்.. வெளிநாடு செல்ல ரெடியா
இஸ்ரேல்: தைவான் மற்றும் இஸ்ரேலில் தலா ஒரு லட்சம் பேர் என மொத்தம் 2 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு ரெடியாகி வருகிறது. தைவானை சீனாவும், இஸ்ரேலை பாலஸ்தீனமும் அச்சுறுத்தும் நிலையில் இருநாடுகளும் இந்தியாவை நம்பி உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடாக தைவான் உள்ளது. தைவானுக்கு தற்போது சீனாவில் இருந்து அச்சுறுத்தல் உள்ளது. தைவான் மீது போர் தொடுத்து அதனை சீனா தன்னுடன் இணைத்து கொள்ள விரும்புகிறது.
இதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு என்பது தொடர்ந்து வருகிறது. மேலும் சீனாவுடனான மோதலுக்கு நடுவே பல நாடுகளிடம் தைவான் உதவி கோரி வருகிறது.

இத்தகைய சூழலில் தான் தைவானில் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவுடன் தைவான் தனது உறவை மேம்படுத்த விரும்புகிறது. அதோடு தைவானை பொறுத்தமட்டில் அதிகமான மக்கள் வயதானவர்களாக உள்ளனர். தைவான் மக்கள்தொகையில் 5ல் ஒருவர் முதியவராக உள்ளார். இதனால் அந்த நாடு இந்தியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக இந்தியா-தைவான் இடையே வேலைவாய்ப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு தைவானில் வேலை கிடைக்கும். இவர்கள் தைவானில் உள்ள தொழிற்சாலை, பண்ணைகள், மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படுவார்கள். அநேகமாக அடுத்த மாதத்துக்குள் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இந்தியர்கள் தைவான் செல்ல வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இவ்வாறு வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கு அங்குள்ள மக்களுக்கு நிகரான சம்பளத்தை வழங்க உள்ளது. இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‛‛இந்தியா-தைவான் இடையேயான வேலைாய்ப்பு ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளது'' என்றார்.
அதேபோல் இஸ்ரேலும் ஒரு லட்சம் இந்தியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. தற்போது இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. இதனால் 90 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் கட்டுமான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அதாவது இஸ்ரேல் கட்டுமான தொழிலில் ஈடுபடுவோரில் 25 சதவீதம் பேர் பாலஸ்தீனியர்கள்.
தற்போதைய போர் நடவடிக்கையால் அவர்கள் இஸ்ரேலில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனால் கட்டுமான தொழில் முடங்கி உள்ளது. இதனை நிவர்த்தி செய்ய ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வழங்க அங்கு செயல்படும் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. மேலும் இஸ்ரேலில் இந்தியர்களை பணியமர்த்துவதற்கு அந்த நிறுவனங்கள் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அசரிடம் அனுமதி கோரியுள்ளனர்.
இதுபற்றி இஸ்ரேல் பில்டர்ஸ் அசோசியேஷனின் துணை தலைவர் ர் ஹைம் ஃபெய்க்லின் தரப்பில், ‛‛இந்தியாவுடன் நாங்கள் பேசி வருகிறோம். கட்டுமான தொழிலுக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் தொழிலாளர்களை இந்தியாவில் இருந்து கொண்டு வர முடிவு செய்துள்ளோம். மேலும் இதற்கு இஸ்ரேல் அரசும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இஸ்ரேல் அனுமதி அளிக்கும் என நம்புகிறோம்'' என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications