எந்நேரமும் கேட்கும் குண்டு சத்தம்.. தொடர் பயிற்சியில் சீனா! படையெடுக்க திட்டம் - தைவான் பரபர தகவல்
தைபே: அமெரிக்க சபாநாயகர் பெலோசி வருகையை அடுத்து சீனா தொடர்ந்து தைவானை சுற்றி ராணுவ மற்றும் ஆயுத பயிற்சிகளில் ஈடுபட்டு வருவது தங்கள் நாட்டை படையெடுப்பதற்கான திட்டம் என தைவான் தெரிவித்து உள்ளது.
Recommended Video
கடந்த 1949 ஆம் ஆண்டு வெடித்த உள்நோட்டு போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. தைவான் சுயாதீனமாக செயல்பட்டு வந்தாலும் சீனா அதற்கு உரிமைகோரி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
முதல்கட்டமாக சிங்கப்பூருக்கு சென்ற அவர் அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார். அமெரிக்க சபாநாயகரின் இந்த ஆசிய பயணத்தில் தைவானும் இடம்பெற்று இருந்தது சீனாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியது. நான்சி பெலோசி தைவான் வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் கண்டனம் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
"நான்சி பொலோசி தைவான் வருவதை எங்களால் அனுமதிக்க முடியாது. நெருப்புடன் விளையாடுபவர்கள் சாம்பலாகி போவது உறுதி." என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் அவர் எச்சரிக்கை விடுத்தார். ஜீ ஜின்பிங்கின் எதிர்ப்பை தொடர்ந்து நான்சி பெலோசி தைவான் செல்வாரா? அல்லது பின்வாங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் நிலவியது.

தைவானில் பெலோசி
இந்த நிலையில் தனது பயணத்திலும் பின்வாங்காமல் அவர் தைவானுக்கு கடந்த 2 ஆம் தேதி இரவு சென்றடைந்தார். தைவான் தலைநகர் தைபே சென்றடைந்த அவருக்கு அந்நாடு ராணுவ பாதுகாப்பை அளித்தது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி 3 ஆம் தேதி தைவான் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

போர் விமானங்கள்
இதுகுறித்து செவ்வாய் கிழமை சீன பாதுகாப்புத்துறை தெரிவிக்கையில், "சீன ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. திட்டமிட்ட ராணுவ நடவடிக்கைகளை எடுப்போம். சீனாவின் பாதுகாப்பு படை கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம். தைவானின் கிழக்கு கடல் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த உள்ளோம்." என்று அறிவித்தது. அதேநாளில் தைவானின் வான் எல்லையில் 21 சீன போர் விமானங்கள் புகுந்தன.

படையெடுக்கும் திட்டம்
கடந்த 4 ஆம் தேதி தைவானை சுற்றிலும் உள்ள கடற்பகுதிகளில் சக்திவாய்ந்த 11 ஏவுகணைகளை ஏவி சீன ராணுவம் சோதனை நடத்தியது. தொடர்ந்து இன்று வரை சீனா பல கட்ட ராணுவ பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதுகுறித்து தைவான் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவிக்கையில், "ராணுவ மற்றும் ஆயுதப் பயிற்சிகள் மூலம் தைவான் மீது படையெடுக்க சீனா தயாராகி வருகிறது." என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications