தஜிகிஸ்தானில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை.. மீறினால் பல லட்சம் அபராதம்.. அதிரடி உத்தரவு போட்ட அரசு
துசான்பே: 96 சதவீதத்திற்கும் மேல் முஸ்லீம்கள் வசிக்கும் நாடான தஜிகிஸ்தானில் இல்ஸாமியர்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஹிஜாப் அணிந்தால் இந்திய மதிப்பில் ரூ 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் தஜிகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்று தஜிகிஸ்தான். ஆப்கானிஸ்தான், உஸ்பெஸ்கிதான் ஆகிய நாடுகளின் அருகே உள்ள தஜிகிஸ்தான் ஒரு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடாகும். குடியாரசு நாடான தஜிகிஸ்தானில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இது 96 சதவிகிதமாகும்.

சமீப காலமாக தஜிகிஸ்தான் மதசார்பற்ற நாடு என அடையாளப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்தான் தற்போது, பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்து இருக்கிறது. தஜிகிஸ்தான் அரசு கல்வித் துறை, கடந்த 2007ஆம் ஆண்டு இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய உடைகள் ஆகியவற்றை மாணவர்கள் அணிவதற்கு தடை விதித்தது.
அப்போது முதலே ஹிஜாப் மீதும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. இந்த நிலையில், தற்போது ஹிஜாப் அணிய தடை விதிக்கும் சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் எம்மோலி ரஹ்மோன் ஒப்புதல் அளித்துள்ளார். ஜிபா என்பது ஏலியன்களின் உடை என்றும் தஜிகிஸ்தான் கூறியுள்ளது. தடையை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
8 ஆயிரம் முதல் 65 ஆயிரம் சோமனி (somoni) அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.60,560 முதல் 5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், இந்த புதிய சட்டத்தை மீறும் அரசு அதிகாரிகள் மத அலுவலர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது மட்டும் இன்றி பக்ரீத் பண்டிகையின் போது, பெரியவர்களிடம் இருந்து சிறுவர்கள் பணம் பெறும் மத சடங்கான ஈதி என்ற வழக்கத்திற்கும் தடை விதிக்கும் சட்டத்தில் தஜிகிஸ்தான் அதிபர் கையெழுத்திட்டு இருக்கிறார். தஜிகிஸ்தானின் இந்த புதிய சட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கின்றன. தஜிகிஸ்தான் அன்னிய நாடுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாகவும் கலாசார பாரம்பரியத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
கடந்த 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தபோது தஜிகிஸ்தான் நாடு உருவானது. இஸ்லாமியகள் அதிகம் வசிக்கும் கொசோவோ, அஜர்பைஜான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், அரசு அதிகாரிகளுக்கு புர்கா மற்றும் ஹிஜாப் அணிய தடை உள்ளது.












Click it and Unblock the Notifications