ஒன்றல்ல, 2 கின்னஸ் சாதனை படைத்துள்ள சூப்பர் நாய் ஸ்வீட் பீ
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள நாய் ஒன்று 2 கின்னஸ் சாதனைகள் படைத்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸ் ரோதகர் என்பவரின் செல்ல நாய் ஸ்வீட் பீ. ஆஸ்திரேலிய ஷெபர்ட் மற்றும் பார்டர் கோலி கலப்பினத்தைச் சேர்ந்தது. ஸ்வீட் பீ தலையில் ஒரு கேனை வைத்துக் கொண்டு அது கீழே விழாமல் 100 மீட்டர் தூரம் ஓடியுள்ளது. 100 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்கள் 55 நொடிகளில் கடந்துள்ளது.
தலையில் கேனை வைத்து 100 மீட்டர் தூரத்தை வேகமாக கடந்த நாய் என்று ஸ்வீட் பீ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு இலினாய்ஸ் மாநிலம் கிரேஸ்லேக்கில் உள்ள லேக் கவுன்ட்டி கல்லூரியில் நடந்த போட்டியில் தான் ஸ்வீட் பீ சாதனை படைத்ததாக கின்னஸ் சாதனை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஸ்வீட் பீ மேலும் ஒரு கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது. அதாவது தலையில் ஒரு கிளாஸ் தண்ணீரை வைத்துக் கொண்டு அது கீழே விழாமல் 10 அடி எடுத்து வைத்துள்ளது ஸ்வீட் பீ.
ஒரு நாய் தலையில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் அதிக தூரம் நடந்துள்ளது என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது அது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications