ஆப்கானிஸ்தானில் குந்தூஸ் நகரை கைப்பற்றிய தாலிபான்கள்: சாலைகளில் சிதறிக் கிடக்கும் சடலங்கள்
காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குந்தூஸ் நகரை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குந்தூஸ் மாகாண தலைநகரான குந்தூஸை தாலிபான்கள் திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை குந்தூஸ் நகருக்குள் புகுந்த தாலிபான் தீவிரவாதிகள் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்கினர். மேலும் அருகில் உள்ள பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு படையினருடன் மோதினர்.

2001ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் தாலிபான்கள் முக்கிய நகரை கைப்பற்றியுள்ளனர். மதிய வேளையில் அவர்கள் உளவுத் துறையின் தலைமையகத்தை கைப்பற்றியதோடு மட்டும் அல்லாமல் ஐ.நா. கட்டிடங்களை தீ வைத்து எரித்தனர். மேலும் குந்தூஸ் நகரில் உள்ள சிறைக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்தனர்.
இதற்கிடையே அரசு அதிகாரிகள் பலர் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் என்.ஜி.ஓ. ஆட்களுடன் நகரை விட்டு தப்பியோடிவிட்டனர். அதிகாலை 3 மணியில் இருந்து துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டு வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். குந்தூஸில் தற்போது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள்.
இதுவரை 40 பொதுமக்கள் உள்பட 95 பேர் பலியாகியுள்ளனர். தெருக்களில் பிணங்களாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தாலிபான்கள் மேற்கில் உள்ள சர்தாரா, தென்-மேற்கில் ஆலியாபாத், கிழக்கில் கானாபாத் மற்றும் வடக்கில் இமாம் சாஹெப் ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து தாக்குதல்களை துவங்கியுள்ளனர்.
அஸ்ரப் கனி ஆப்கானிஸ்தான் அதிபராக பதவியேற்று ஓராண்டு முடிவதற்கு முந்தைய நாள் தாலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications