பெண்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மூடப்படும்! ஆப்கானில் தலிபான்கள் கடும் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மூடப்படும் என்று அந்நாட்டு தலிபான்கள் அரசு அறிவித்திருக்கிறது. ஹிஜாப் உடையை சரியாக அணியவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றிரவு ஆப்கன் பொருளாதார அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "தேசிய மற்றும் மாநில அளவில் செயல்படும் என்ஜிஓ நிறுவனங்களில் சமீப காலமாக பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றன. இனி பெண் பணியாளர்கள் இருக்க கூடாது. மீறினால் அந்த நிறுவனங்கள் தங்களது உரிமத்தை இழக்க நேரிடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு பெண்களுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

taliban afghanistan women

ஏற்கெனவே தாலிபான்களின் கட்டுப்பாடுகள் ஆப்கானில் எல்லை மீறி சென்றிருக்கின்றன. குறிப்பாக கல்வி விஷயத்தில் இன்று வரை பெண்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றனர். 6ம் வகுப்பு மேல் பெண்கள் படிக்க கூடாது என்று தலிபான் அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவு தற்காலிகமானதுதான் என்று அரசு கூறினாலும் கூட, மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறக்க எந்த முயற்சியும் தற்போது வரை எடுக்கப்படவில்லை. அந்நாட்டில் வாழும் பெண்கள் தங்களின் சாதாரண அன்றாட வாழ்க்கைக்காக கடுமையாக ஏங்கி வருகின்றனர்.

அவர்களின் விடுதலைக்காக போராடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிறையில் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை ஆப்கன் அரசு மறுத்திருக்கிறது.

கல்வி கற்க தடை, பொது வெளியில் கூட தடை, உடைகளில் கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்கள் பெண்களை கடுமையாக பாதித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது வேலைக்கும் செல்லக்கூடாது என்று பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவால், வேலையில் இருந்த சொற்பமான அளவிலான பெண்களும் தங்கள் வேலையை இழந்திருக்கின்றனர். அரசின் இந்த உத்தரவுக்கு காரணமாக, ஹிஜாப் குறிப்பிடப்படுகிறது. ஹிஜாப்-ஐ முறையாக அணிவதில்லை என்று கூறிதான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், முற்போக்கு அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் தேதி அமெரிக்காவின் படைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது. அதன் பின்னர் முழு கட்டுப்பாட்டையும் தலிபான்கள்தான் கையில் எடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தலிபான்கள் விதித்த அடக்குமுறைகள்: பெண்கள் சத்தமாக பேசக்கூடாது, பால்கனியில் வந்து நிற்க கூடாது, புகைப்படம் எடுக்க கூடாது, பியூட்டி பார்லர் போக கூடாது, ஆண்களின் கவனத்தை சிதறடிப்பதாக கூற ஹை ஹீல்ஸ் போடவும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, நெயில் பாலிஷ் போடக்கூடாது, 8 வயது ஆகிவிட்டால் தங்களது ரத்த உறவினருடன்தான் பழக்கத்தில் இருக்க வேண்டும், வெளியில் வருவதெனில் அவர்களுடன்தான் வர வேண்டும், டிவி ரேடியோ
நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க தடை என ஏராளமான கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+