சிறுவனை சுட்டு கொன்று "தண்டனை" தந்த தாலிபான்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த பிஞ்சு.. ஆப்கானில் அதிர்ச்சி!
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் கொடூரமான தண்டனைகளை கொடுக்க தொடங்கிவிட்டனர். பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க தொடங்கி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை பிடித்து ஒரு மாதம் கடந்துவிட்டது. தொடக்கத்தில் அனைத்து உரிமைகளும் எல்லோருக்கும் வழங்கப்படும். பெண்களுக்கான உரிமைகளை சட்டத்திற்கு உட்பட்டு வழங்குவோம் என்று தாலிபான்கள் குறிப்பிட்டது.
நாங்கள் மாறிவிட்டோம் என்பது போல தாலிபான்கள் வெற்றிபெற்ற பின் பேசி இருந்தது. சர்வதேச அளவில் தாலிபான்கள் அங்கீகாரத்தை பெற தீவிரமாக முயன்று வருகிறது. சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற தாலிபான்கள் முயன்று கொண்டு இருக்கிறது.

இமேஜ்
இதற்காக தாலிபான்கள் தங்களின் இமேஜை மாற்ற முயன்று வருகிறது. 90களில் இருந்தது போல நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம் என்று தாலிபான்கள் கூறி வந்தது. ஆனால் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தங்கள் பழைய ஆட்சி முறையை கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. கடுமையான சட்டங்கள், கடுமையான தண்டனைகளை தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் நிறைவேற்ற தொடங்கி உள்ளது.

கடத்தல் தண்டனை
கடந்த சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் ஹெராத் பகுதியில் 4 பேருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது. பிஸ்னஸ்மேன் ஒருவரை கடத்தி சென்ற வழக்கில் இவர்கள் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது. மக்கள் இது போன்ற குற்றங்களை செய்ய கூடாது என்பதால் அந்த நான்கு பேரில் சிலரின் உடல் பொது இடங்களில் தொங்கவிடப்பட்டது. இது உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.

சவுக்கடி
அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் தாலிபான்கள் இரண்டு செய்தியாளர்களுக்கு சவுக்கடி தண்டனை கொடுத்தனர். நேமாத் நாக்டி, தக்கி டார்யாபி ஆகிய இரண்டு செய்தியாளர்கள் பெண் உரிமை குறித்து தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வந்ததால் அவர்களுக்கு சவுக்கடி தண்டனை கொடுக்கப்பட்டது. மற்ற செய்தியாளர்களுக்கு பாடம் எடுக்கும் வகையில் இந்த தண்டனை புகைப்படமாக வெளியிடப்பட்டு இருந்தது.
Recommended Video

மீண்டும் கொலை?
இந்த நிலையில்தான் ஆப்கானிஸ்தானை சிறுவன் ஒருவர் தாலிபான் மூலம் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். ஆப்கானிஸ்தானில் பஞ்சசீர் பகுதியில் தாலிபான்களுக்கு எதிராக முஜாகிதீனின் ஒரு அமைப்பான கொரில்லா போராளி குழுக்கள் போராடி வருகிறது. இந்த நிலையில் இந்த அமைப்பை சேர்ந்தவரின் மகன் என்று சந்தேகிக்கப்படும் சிறுவனை தாலிபான்கள் கொலை செய்துள்ளனர். அந்த சிறுவனின் அப்பா பஞ்சசீர் போராளி குழுவில் இருப்பதாக கூறப்படுகிறது.

போராளி
இதனால் அந்த சிறுவனை தாலிபான்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். அந்த சிறுவனுக்கு 10 வயது கூட ஆகவில்லை என்று பஞ்சசீர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. அதோடு அந்த சிறுவன் ரத்த வெள்ளத்தில் மிதக்கும் வீடியோவில் இணையத்தில் வெளியாகி உள்ளது. அருகில் அந்த சிறுவனின் பிஞ்சு தங்கை அமர்ந்து கண்ணீர்விடும் காட்சிகள் அதிர்ச்சி அளிக்க செய்துள்ளது.

வீடியோ
அந்த சிறுவனின் உடலில் பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூட்டு காயங்கள் இருப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. சர்வதேச நாடுகளை இந்த வீடியோ உலுக்கி உள்ளது. 10 வயது கூட நிரம்பாத சிறுவனுக்கு இப்படி தண்டனை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம், சிறுவன் செய்த தவறு என்ன என்று பலர் இணையத்தில் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். தாலிபானின் இந்த செயல் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications