ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் - 24 போலீசார் பலி
ஆப்கானிஸ்தானில் 2 சோதனைச் சாவடிகள் மீது தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 போலீசார் உயிரிழந்தனர்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் 2 சோதனைச் சாவடிகள் மீது தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 போலீசார் உயிரிழந்தனர். தாக்குதலை தொடர்ந்து அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை ஒழிக்கும் பணியில் உள்நாட்டு படைகளும் அமெரிக்க கூட்டுப்படைகளும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அங்குள்ள லஸ்கர்கா நகரில், சோதனைசாவடி ஒன்றின்மீது தாலிபன் தீவிரவாதிகள் நேற்று அதிகாலை துப்பாக்கிகளையும், கையெறிகுண்டுகளையும் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் 12 போலீசார் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, அங்கிருந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் தீவிரவாதிகள் கொள்ளையடித்து சென்றனர். சோதனைச்சாவடி தரப்பில் இருந்து ஒருவர் தாலீபன் தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்தாக கூறப்படுகிறது.
இதேபோல் அங்குள்ள மர்ஜா மாவட்டத்தில் போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 12 போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications