சோம்நாத் கோவிலை தாக்கியவரின் நினைவிடத்தில்.. தாலிபான் திடீர் சிறப்பு மரியாதை.. இந்தியாவிடம் சீண்டல்?
காபூல்: குஜராத் சோம்நாத் கோவிலில் சிலைகளை உடைத்தவரான முகமது காஸ்னி நினைவிடத்தில் தாலிபான்கள் இன்று சிறப்பு மரியாதை செலுத்தினார்கள்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. அங்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு எதிராக தாலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தாலிபான் அரசை சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொண்டு உள்ளன.
ஆனால் தாலிபான் அரசை இன்னும் இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. தாலிபான்களை இந்தியா எப்போதும் அங்கீகரித்தது கிடையாது. இதனால் இந்தியாவிடமும் தாலிபான் இதுவரை சுமுகமாக செல்ல எந்த விதமான முயற்சிகளையும் எடுக்கவில்லை.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் சிலைகளை உடைத்தவரான முகமது காஸ்னி நினைவிடத்தில் தாலிபான்கள் இன்று சிறப்பு மரியாதை செலுத்தினார்கள். குஜராத்தின் பிரபாஸ் பட்டன் பகுதியில் இருக்கும் சோம்நாத் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது ஆகும். பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் முக்கிய தெய்வமாக சிவன், இந்துக்கள் மூலம் வழிபடப்பட்டு வருகிறார்.

சிவன்
இந்த சிவன் கோவில் மீது பல முறை படையெடுப்புகளின் போது தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. உள்ளே இருக்கும் சிலைகள் நொறுக்கப்பட்டுள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1951ல் இந்த கோவில் முழுமையாக புனரமைக்கப்பட்டது. அதோடு இந்த கோவில் அறநிலையத்துறையின் தலைவராக பிரதமர் நியமிக்கப்பட்டார். தற்போது இந்த கோவிலின் அறநிலையத்துறை தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார்.

தாக்குதல்
இந்த கோவிலில் தாக்குதல் நடத்தியவர்களில் இஸ்லாமிய சுல்தான் முகமது காஸ்னியும் ஒருவர். கோவிலில் இந்த சிலைகளை இவர் சேதப்படுத்தியதாகவும் புகார்கள் உள்ளன. இந்த படையெடுப்பு 17ம் நூற்றாண்டில் நடைபெற்றது. இந்த நிலையில்தான் ஆப்கானிஸ்தானில் தற்போது இருக்கும் முகமது காஸ்னி நினைவிடத்தில் தாலிபான்கள் மரியாதை செலுத்தி உள்ளனர். அவரின் நினைவிடத்திற்கு சென்று அனாஸ் ஹக்கானி உள்ளிட்ட மூத்த தாலிபான் தலைவர்கள் மரியாதை செலுத்தி உள்ளனர்.

இந்தியாவிடம் சீண்டல்?
இந்த நிலையில் இந்தியாவை சீண்டும் வகையில் அனாஸ் ஹக்கானி இது தொடர்பாக ட்வீட் ஒன்றையும் செய்துள்ளார். அதில், சுல்தான் முகமது காஸ்னி நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினோம். இவர் இஸ்லாமியர்களின் போராளி. காஸ்னி பகுதியில் இஸ்லாமியர்களின் பலத்தை நிரூபித்து வலிமையான ஆட்சியை உருவாக்கியவர்.சோம்நாத்தில் சிலைகளை உடைத்த போராளி இவர் என்று அனாஸ் ட்வீட் செய்துள்ளார். இந்தியாவின் முக்கிய கோவில் ஒன்று தாக்கப்பட்டதை நினைவு கூர்ந்து இவர் ட்வீட் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications