ஆப்கானில் 85%ஐ கைப்பற்றிய தாலிபான்.. கந்தகார் துணை தூதரகத்தை காலி செய்த இந்தியா? நடந்தது என்ன?
காபுல்: ஆப்கானிஸ்தானின் கந்தகார் துணை தூதரகத்தில் இருந்து இந்திய அதிகாரிகள் பலர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய அரசியல் திருப்பம் நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 20 வருடமாக தாலிபான் படைக்கும் அமெரிக்க ராணுவத்திற்கும் போர் நடந்து வந்தது. இந்த நிலையில், கடந்த வருடம் ஆப்கானிஸ்தானில் போரை நிறுத்துவதாக அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டது.
தாலிபான் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அமெரிக்க படைகள் ஒப்புக்கொண்டது. செப்டம்பர் 11, 2021க்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் மாற்றம்
ஆனால் அமெரிக்க அதிபர் பிடன் முன்கூட்டியே அமெரிக்க படைகளை வாபஸ் வாங்கும் முடிவை எடுத்துள்ளார். ஆகஸ்ட் 31ம் தேதியே மொத்தமாக அனைத்து அமெரிக்க படைகளும் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்துள்ளார். அதோடு மொத்த ஆப்கானிஸ்தானும் காபுல் தலைமையின் கீழ் செயல்படுவது கஷ்டம் என்றும் அறிவித்துள்ளார். அதாவது ஆப்கானிஸ்தான் ராணுவம், தாலிபான் படைகளிடம் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளார்.

தோல்வி
இந்த நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறியதை பயன்படுத்தி ஆபகானிஸ்தானில் வேகமாக தாலிபான் முன்னேறி வருகிறது. ஆப்கானிஸ்தானின் 85% பகுதிகளை கைப்பற்றுவிட்டதாக தாலிபான் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 400 மாவட்டங்கள் உள்ள நிலையில் கிட்டத்தட்ட 250 மாவட்டங்களை தாலிபான் கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளது.

சரண்டர்
ஆப்கானிஸ்தானின் பல்வேறு பார்டர்களை தாலிபான் கைப்பற்றி உள்ளது. அதோடு ஆப்கானிஸ்தானின் முக்கியமான நகரங்களை எல்லாம் தாலிபான் கைப்பற்றி உள்ளது. ஆப்கான் படைகள் வரிசையாக தாலிபான் படைகளிடம் சரண்டர் ஆகி வருகிறது. தற்போது ஆப்கானிஸ்தானின் முக்கியமான நகரமான கந்தகாரில் மோதல் வெடித்துள்ளது.

முன்னேற்றம்
கந்தகாரில் தாலிபான் படைகள் வேகமாக முன்னேறி வருகிறது. அங்கு பெரிய மோதல் வெடிக்கும் நிலை உள்ளதால் ஆப்கானிஸ்தானின் கந்தகார் துணை தூதரகத்தில் இருந்து இந்திய அதிகாரிகள் பலர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. நேற்று அந்த துணை தூதரகத்தை இந்தியா மூடியதாக செய்திகள் வந்தன, ஆனால் அதன்பின் இந்திய வெளியுறவுத்துறை இந்த செய்தியை மறுத்தது.

வெளியேற்றம்
இந்த நிலையில் அங்கு துணை தூதரகம் தொடர்ந்து செயல்படும் என்று இந்தியா கூறியுள்ளது. ஆனால் அங்கு பாதுகாப்பு கருதி 50 இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேறி உள்ளனர். துணை தூதரகம் தொடர்ந்து இயங்கினாலும், முக்கிய இந்திய அதிகாரிகள் எல்லோரும் கந்தகாரில் இருந்து வெளியேறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று
நேற்று இரவே சிறப்பு விமானம் மூலம் இவர்கள் கந்தகாரில் இருந்து வெளியேறினார்கள். இன்று இரவே கந்தக்காரை தாலிபான் படைகள் பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் காபுல் மற்றும் மஸார் இ ஷாரிப் பகுதியிலும் இந்தியாவின் தூதரங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications