காப்பாத்துங்க.. உயிருக்கு ஆபத்து.. கதறும் ஆப்கன் பெண் நீதிபதிகள்.. நாட்டை விட்டு தப்பிக்க போராட்டம்
தாலிபான்களால் பெண் நீதிபதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது
காபூல்: நாடு முழுவதும் உள்ள சிறை கைதிகளை தலிபான்கள் விடுவித்துள்ள நிலையில், அவர்களால், சுமார் 250 பெண் நீதிபதிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர்.. விரைவில் புதிய ஆட்சி உருவாக்க திட்டமிட்டும் வருகின்றனர்...
அதற்கேற்றபடி, அனைத்து மாகாணங்களுக்கும் கவர்னர்கள், அதிகாரிகள் ஆகியோர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.. விரைவில் அனைவரும் பதவியேற்கக்கூடும் என்றும், அதற்கான நாள் வெளியிடப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

உரிமைகள்
இந்நிலையில், தலிபான்களின் முந்தைய ஆட்சிக்காலத்தில் இருந்ததை போலவே, இந்த முறையும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படலாம் என்றும், பெரும்பாலான பணிகளில் பெண்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்றும் பெரும் அச்சம் எழுந்துள்ளது... அதனால் ஏராளமான பெண்கள் பிற நாடுகளில் தஞ்சம் அடைய முயன்று வருகிறார்கள்.. ஆனால், பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று தலிபான் அமைப்பு சொல்லி இருந்தாலும், அதற்குபிறகு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

சட்டதிட்டம்
எனினும், ஷரியா சட்டம் மூலமாக ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி நடைபெறும்... இந்த சட்டங்களை முறையாக கடைபிடிக்க போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.. கடந்த 20 வருட காலமாக, அமெரிக்க அரசின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டை ஆட்சி செய்து வந்துள்ளனர்... அதேபோல, கோர்ட் மூலம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் தண்டனையை அனுபவித்து வந்தனர்.
Recommended Video

நீதிபதிகள்
இப்போது தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் குற்றவாளிகள் எல்லாருமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.. அதுமட்டுமல்லாமல், இந்த குற்றவாளிகளுக்கு அரசாங்கத்தில் முக்கிய பதவிகளையும் தாலிபான்கள் தந்து வருகின்றனர்.. இதன்காரணமாக, ஆப்கானிஸ்தான் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பதவி வகித்த பெண்கள் பலர், இதனால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர்..

பெண் நீதிபதிகள்
தங்களால் ஒரு காலத்தில் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள், சுதந்திரமாக நடமாடி கொண்டிருக்கிறார்கள்.. இப்படி தங்களுக்கு தண்டனை வழங்கிய 250 பெண் நீதிபதிகளை பழிவாங்க துடித்து கொண்டிருக்கிறார்களாம்.. இதனால் பெண் நீதிபதிகளும் தங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு நாட்டை விட்டு தப்பித்து செல்ல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...

முக்கிய பணிகள்
ஏற்கனவே, தாலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சம உரிமை அனைத்துமே மறுக்கப்படுகிறது... அரசாங்கத்தில் முக்கிய பணிகளில் ஆண்களே இதுவரை பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.. ஏற்கனவே, நீதித்துறையில் பணிபுரியும் பெண்களை பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதலும் நடத்தி உள்ளனர்.

பதற்றம்
இப்படித்தான், ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் 2 பேரை சுட்டுக் கொன்றனர்.,.. இப்போது நாடு முழுவதும் கைதிகள் தலிபான் அமைப்பால் விடுதலை செய்யப்பட்டிருப்பதால், பெண் நீதிபதிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நாட்டை விட்டு வெளியேறிய பெண் நீதிபதி ஒருவர் பதற்றத்துடன் தெரிவிக்கிறார்.

சிறை தண்டனை
அந்த நீதிபதி சொல்லும்போது, "காபூலில் என் வீடு உள்ளது.. அங்கே தாலிபான் அமைப்பை சேர்ந்த 4 பேர், வந்துள்ளனர்.. என்னைபற்றி விசாரித்துள்ளனர்.. இங்கே ஒரு பெண் நீதிபதி இருந்தாரே? அவர் எங்கே என்று கேட்டுள்ளனர்... அவர்கள் 4 பேருமே என்னால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.

மனித உரிமை
இதேபோல்.. ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண் நீதிபதிகளிடம் இப்போது தொடர்பு கொண்டுள்ளேன்.. அவர்களும் பயந்து போயுள்ளனர்.. தங்களை தங்களை மீட்காவிட்டால் உயிருக்கு ஆபத்து என்று என்னிடம் சொல்கிறார்கள்" என்று கலங்கியபடியே சொல்கிறார்... இப்போது நீதிபதிகளும் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளதால், அவர்களை வெளியேற்றுவதற்காக மனித உரிமை ஆர்வலர்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications