அடிச்சான் பாரு லக்கி பிரைஸ்..ஷார்ஜா லாட்டரியில் 67 கோடி அள்ளிய 27 வயது தமிழர்..பிறந்த நாள் பரிசு
ஷார்ஜா: ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்தால் பணம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்பார்கள் அப்படித்தான் ஷர்ஜாவில் பணிபுரியும் தமிழர் ஒருவருக்கு லாட்டரியில் ரூ. 67 கோடி பரிசாக கிடைத்துள்ளது. அதுவும்
பிறந்தநாள் பரிசாக அந்த இளைஞருக்கு அதிர்ஷ்ட தேவதை வாரி வழங்கியுள்ளார்.
அந்த அதிர்ஷ்டசாலியின் பெயர் காதர் ஹூசைன் என்பதாகும். 27 வயதான காதர் ஹூசைன், வேலை தேடி ஷார்ஜாவிற்கு சென்றார். அங்கு அவருக்கு கார் வாஷ் செய்யும் கம்பெனியில் சூப்பர்வைசர் வேலை கிடைத்தது.
மாதம் ரூ.1500 டிஎச் சம்பளமாக பெற்று வந்தார்.
வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை சேர்த்து வைத்து காதர் ஹூசைன் தனது நண்பர் தேவராஜ் உடன் சேர்ந்து ஐக்கிய அரபி எமிரேட்ஸ்சின் பிக் டிக்கெட் டிராவில் லாட்டரி வாங்கினார்.

லக்கி பிரைஸ்
கடந்த 3ஆம் தேதி தனது குடும்பத்தை பார்க்க வந்து இருந்த போது லாட்டரியில் அவருக்கு 30 மில்லியன் திர்ஹாம் பணம் பரிசாக கிடைத்தது இந்திய மதிப்பில் அது 67 கோடி ரூபாயாகும். காதர் ஊருக்கு வந்திருந்ததால் லாட்டரி டிக்கெட் விற்பனையாளர்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது நல்ல நேரம்.. லாட்டரி குலுக்கலை நேரலையாக ஊரில் இருந்தே பார்த்தார்.

ஷார்ஜா பறந்த காதர்
அப்போது அவருக்கு மிகப்பெரிய பரிசு கிடைத்தது தெரிந்தது. அளவிடமுடியாத மகிழ்ச்சியடைந்த காதர் உடனடியாக விமானத்தை பிடித்து ஷார்ஜாவிற்கு வந்து லாட்டரியில் விழுந்த பரிசுப்பணத்தை பெற்றுச்சென்றார். நேற்று வரை மாத சம்பளம் பெற்று வந்த காதர் இப்போது பல கோடி ரூபாய்க்கு அதிபதி.

நம்ப முடியவில்லை
இன்னமும் அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருக்கிறார் காதர் ஹுசைன், தான் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் தன்னால் இவ்வளவு பெரிய தொகையை ஈட்ட முடியாது எனத் தெரிவித்தார். தனது பிறந்த நாளுக்கு சில நாட்களுக்கு முன்புதான் அந்த அதிர்ஷ்ட எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டை வாங்கினாராம் காதர் ஹூசைன்.

சொந்த வீடு வாங்க ஆசை
இந்த பணத்தை என் நண்பன் தேவராஜூடன் பங்கிட்டு கொள்வேன். ஒரே இரவில் என் வாழ்க்கை மாறிவிட்டது என்று கூறியுள்ளார் காதர் ஹூசைன். நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும். எனது குடும்பத்தினருக்கு சொந்த வீடு கட்டித் தர வேண்டும். குடும்பத்துடன் இங்கு அழைத்துக்கொண்டு வந்து விடுவேன் என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார் காதல் ஹூசைன்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications