பஹ்ரைனில் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் தமிழச்சி
பஹ்ரைன்: பஹ்ரைனில் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்தி சேவையாற்றி வருகிறார் தமிழகத்தின் கள்ளக்குறிச்சியினைச் சேர்ந்த அஞ்சலை பொன்னுசுவாமி.
கடந்த வாரம் அமீரகம் வந்திருந்த இவரை / சார்பில் வாழ்த்து கூறி நடைபெற்ற சந்திப்பிலிருந்து இதோ:

திருமணத்திற்குப் பின்னர் கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் பஹ்ரைனில் வசித்து வருகிறார். பட்டப்படிப்பு பயிலாவிட்டாலும் கணவரின் ஆதரவினால் சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்சியளித்து வருகிறார். சுனாமியின் போது கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் பல்வேறு உதவிகள் செய்தவர்.
பஹ்ரைனில் தமிழர்கள் எதிர்பாராதவிதமான அல்லலுக்குள்ளாகும் போது உதவிகள் செய்து வருகிறார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு கணவரின் மறைவுக்குப் பின்னர் தனது மகனுடன் பஹ்ரைனில் வசித்து வரும் இவர் தனது வாழ்வினை பொதுச்சேவைக்காக அர்ப்பணித்துள்ளார்.
இவரது சேவைகள் தொடர வாழ்த்துவோம். அஞ்சலையை தொடர்பு கொள்ள :
அலைபேசி : 973 - 3982 66 22
மின்னஞ்சல் : [email protected]












Click it and Unblock the Notifications