சவுதியில் விசா காலாவதியான கர்நாடக மாநிலத்தவர் ஊருக்கு செல்ல உதவிய தமிழர்கள்
சவுதி: சவுதியில் தவித்து வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரை தமிழ்நாடு சமூக நல அமைப்பு ஊருக்கு அனுப்பி வைத்து உதவி செய்துள்ளது.
சவுதி அரேபியா இந்தியர்களின் இரண்டாவது தாயகம் என்பதற்கு மற்றுமொரு சான்று முகமது கற்றப்புறா. கர்நாடக மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்தவர். இளம் பிள்ளை வாதத்தால் கால் சற்று சூம்பியவர். கடந்த 10 ஆண்டுகளாக அவர் சவுதியில் இக்காமா இல்லாமல் பணியாற்றி வந்தார்.

ஜெத்தாவுக்கு துவக்கத்தில் வேலைக்கு வந்தவர் தொடர்ந்து பணியாற்ற முடியாததால் ஸ்பான்சரிடம் இருந்து வெளியேறி தம்மாம் வந்து பல இடங்களில் பணியாற்றி பின் கடந்த 5 ஆண்டுகளாக அல் கோபரில் சாப்கான் கன்சல்டிங் நிறுவனத்தில் ஆபீஸ் பாயாக 2 ஆயிரத்து 500 ரியால் சம்பளத்துக்கு தனிப்பிரிவு ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
மூன்றாம் வகுப்பு கல்வி, மாற்றுத் திறனாளி, இக்காமா காலாவதி, 67 வயது என எதுவும் அவரை நிலைகுலையச் செய்யவில்லை. அவ்வப்போது ஊருக்குப் போக வேண்டும் என்று வந்து தமிழ்நாடு சமூக நல அமைப்பின் நிர்வாகி திரு. சுரேஷ் பாரதியை சந்தித்து உதவி கேட்டு நிற்பார். அவரைச் சாந்தப்படுத்தி சம்பளம் கிடைக்கும் வரை, போலீஸ் பிடிக்கும் வரை பணியாற்றுங்கள் என்று அனுப்பி வைப்பார்கள்.
சமீபத்தில் அவருக்கு காய்சலும் குளிரும் இரத்த வாந்தியும் வந்தது. மருத்துவ காப்பீடு இல்லாததால் பணம் கொடுத்து சிகிச்சை பெற்றார். இந்நிலையில் அவரை விரைவில் ஊருக்கு அனுப்பும் பணியை தமிழ்நாடு சமூக நல அமைப்பினர் (தான்ஸ்வா) துவங்கினார்கள்.
தம்மாம் தூதரக சேவை மையத்தில் பதிவு செய்து, இக்காமா தர்ஹீல் பொறுப்பாளர் தான்ஸ்வா சேவைப் பணியாளர் வெங்கடேஷ் அவர்களிடம் முகமது அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவரின் கைரேகைப் பதிவு ஜெயில் காவல் துறையால் பதிவு செய்யப்பட்டு சிறைத் துறை மேலாளரிடம் வெங்கடேஷ் அவர்கள் அழைத்துச் சென்று மருத்துவ வயது காரணம் சொல்லி சிறையிலிடாமலே பாஸ்போர்ட் விசா எக்ஸிட் பெற்றுக் கொடுத்தார். சாப்கான் நிறுவன ஊழியர் திரு. நிசார் விமான டிக்கெட்டை இலவசமாய் கொடுத்தார்.
இந்நிலையில் முகமது நாடு திரும்பி தனது குடும்பத்தாருடன் உள்ளார். அவர் தொலைபேசி மூலம் வெங்கடேஷுக்கும், சவுதி அதிகாரிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications