தான்சானியாவில் ஏரிக்குள் விழுந்த விமானம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு
புகோபா: தான்சானியாவில் ஏரிக்குள் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

தான்சானியாவின் டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நோக்கி 42 பயணிகளுடம் விமான சென்றது. புகோபா விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக பயணிகள் விமானம் தாழ்வாக பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அருகே இருந்த விக்டோரியா ஏரிக்குள் 42 பயணிகளுடன் அந்த விமானம் விழுந்தது.
புகோபா விமான நிலையத்தில் தரை இறங்க நிலையில் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது. இதனையடுத்து உடனடியாக ஏரியில் மூழ்கிய விமானத்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
முதலில் 26 பேர் மீட்கப்பட்டனர்; 3 பேர் பலியாகினர் என செய்திகள் வெளியாகின. தற்போது இச்சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துவிட்டனர். எஞ்சியவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தான்சானியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தான்சானியாவின் பிரதமர் காசிம் கூறுகையில், விமானம் 100 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது நிலவிய மோசமான வானிலையால் பயணிகளுடன் விக்டோரியா எரிக்குள் விமானம் விழுந்தது. உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனாலும் 19 பேர் சடலமாகவே மீட்கப்பட்டனர் என்றார்.
தான்சானியா விமானம், விக்டோரியா ஏரிக்குள் விழுந்ததற்கு மோசமான வானிலை மட்டும்தான் காரணம் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமாண்டர் வில்லியம் என்பவரும் இந்த விபத்துக்கு வானிலைதான் காரணம் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு கென்யா விமான விபத்தில் 114 பயணிகள் உயிரிழந்தனர்; அதன்பின்னர் 2019-ம் ஆண்டு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications