அடித்து நொறுக்கிய சூறாவளி.. ஒரு வழியாக தாயகம் திரும்பும் இந்திய அணி! டெல்லி வந்தடைவது எப்போது?
பார்படாஸ்: பார்படாஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்து 3 நாட்கள் ஆகியும் இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சூறாவளியின் தாக்கம் விரைவில் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் நாளை இரவு அவர்கள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சில கூடுதல் தகவல்களும் இப்போது வெளியாகியுள்ளது.
கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றன. இதன் இறுதிப் போட்டி கடந்த சனிக்கிழமை பார்படாஸில் நடந்தது. இதில் இந்தியா தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.

இதில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி கோப்பையை வென்றது. இந்திய அணி 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐசிசி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும்.
சூறாவளி: கடந்த சனிக்கிழமை போட்டி நடந்த நிலையில், 3 நாட்கள் ஆகிவிட்ட போதிலும், இந்திய அணி வீரர்கள் இன்னும் தாயகம் திரும்பவில்லை. பார்படாஸில் ஏற்பட்டுள்ள பெரில் (Beryl) என்று சூறாவளி புயல் காரணமாகவே இந்தியர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புயல் தீவிரமடையும் முன்பே தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். அடுத்து இந்திய அணி வீரர்கள் கிளம்பும் முன்பு சூறாவளி தீவிரமடைந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் இந்திய அணி தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஹோட்டல் அமைந்துள்ள இடத்திற்கு அருகே சூறாவளி தாக்கியதால் வீரர்கள் யாரும் ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே இந்த புயல் கிரேடு 3 என்ற நிலையில், இருந்து கிரேடு 4 என்ற ஆபத்தான நிலைக்கு நேற்று மாறியது. இதனால் பார்படாஸ் பகுதியில் தங்கியிருந்த இந்தியர்கள் எப்போது திரும்புவார்கள் என்றே தெரியாத சூழல் ஏற்பட்டது.
சிறப்பு விமானம்: இதற்கிடையே இப்போது சூறாவளி பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஒரு வழியாக இந்தியர்கள் தாயகம் திரும்பக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் பார்படாஸ் விமான நிலையம் திறக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். விமான நிலையம் திறக்கப்பட்ட உடனேயே சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் தாயகம் திரும்ப உள்ளனர். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பிசிசிஐ செய்துள்ளது.
பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ள இந்த சிறப்பு விமானம் மூலம் இந்திய அணி ஜூலை 2 செவ்வாய்க்கிழமை பார்படாஸில் இருந்து புறப்பட உள்ளது. அவர்கள் பார்படாஸ் நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி புதன்கிழமை ஜூலை 3ஆம் தேதி காலை 3.30 மணிக்கு அங்கிருந்து கிளம்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் நாளை ஜூலை 3ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு இந்தியாவில் தரையிறங்க உள்ளனர்.
ஏர்போர்ட்: முன்னதாக அங்குள்ள சூழல் குறித்தும் ஏர்போர்ட் எப்போது செயல்படத் தொடங்கும் என்பது குறித்தும் பார்படாஸ் பிரதமர் மியா மோட்லி கூறுகையில், "அடுத்த 12 மணி நேரத்தில் ஏர்போர்ட் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். சூறாவளி கரையைக் கடந்த உடன் நிலைமை சீராகும் என நம்புகிறோம். அதேநேரம் முன்கூட்டியே எதையும் உறுதியளிக்க விரும்பவில்லை.
விமான நிலைய ஊழியர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன்.. விமான நிலையத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஏர்போர்ட்டை திறக்க விரும்புகிறோம். விமான நிலையம் திறக்கப்பட்ட உடன் பலர் இங்கிருந்து புறப்பட உள்ளனர். அவர்கள் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சொந்த ஊர் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்கள் முன்னுரிமை" என்றார்.
'டெல்லி திரும்புவது எப்போது: விமான நிலையம் திறக்கப்பட்ட உடனேயே இந்திய வீரர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானம் இந்திய நேரப்படி நாளை புதன்கிழமை இரவு டெல்லியில் தரையிறங்க உள்ளது.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications