விமானப்படை தளத்தின் மீது திடீர் தாக்குதல்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! பாகிஸ்தானில் ஷாக் சம்பவம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் மியான்வலி விமானப்படை தளத்தின் மீது இன்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் விமானப்படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாவட்டத்தில் உள்ள விமானப்படை பயிற்சி தளம்தான் மியான்வலி. இன்று அதிகாலையில் இங்கு வந்த அடையாளம் தெரியாத 6 மர்ம நபர்கள் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைய முயன்றுள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத ராணுவ வீரர்கள் உடனடியாக அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போதுதான் தாக்குதல் வெடித்திருக்கிறது. 6 பேரும் தனித்தனியாக பிரிந்து ராணவ வீரர்களை தாக்க தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதல் 2 மணி நேரம் வரை நீடித்திருக்கிறது.

முடிவில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். மற்ற மூவரும் அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்நாட்டு ராணுவம் இது குறித்து விளக்கமளித்துள்ளது. அதில், "தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 விமானங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அதேபோல ஒரு எரிபொருள் டேங்கரும் சேதமடைந்துள்ளது. ராணுவத்தினர் நடத்திய துணிச்சலான தாக்குதல் காரணமாக தீவிரவாதிகள், விமானப்படை தளத்திற்குள் நுழையவிடாமல் வெற்றிகரமாக தடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தெஹ்ரீக் -இ-ஜிஹாத் பாகிஸ்தான் (டிஜெபி) என்ற அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. ஏற்கெனவே கடந்த வாரம் இதேபோன்ற ஒரு தாக்குதல் சம்பவம் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நடந்தது. இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், "கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியதையடுத்து தாலிபான் அமைப்புகள் பலம் பெற்றிருக்கின்றன.
அந்நாட்டு தாலிபான்களுடன், பாகிஸ்தானிய தாலிபான்களும் ஒன்று சேர்ந்திருப்பதால் இது போன்ற சிறிய அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதை முற்றாக ஒடுக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது" என்று கூறியுள்ளனர்.
தற்போது பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பாகிஸ்தான் மிகவும் பலவீனமாக இருக்கிறது. இந்த சூழலை பயன்படுத்தி பயங்கரவாத அமைப்புகள் ஆட்சியை கைப்பற்ற முனைகிறதா? என இது போன்ற தொடர் தாக்குதல் சம்பவங்கள் கேள்விகளை எழுப்பியுள்ளன.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications