12 இளம் கால்பந்து வீரர்கள் சிக்கிய குகை.. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பின்னர் மீண்டும் திறப்பு
பாங்காங்: 12 இளம் கால்பந்து வீரர்கள் சிக்கிய தாய் குகை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இங்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12 கால்பந்து வீரர்களும் அவர்களது பயிற்சியாளரும் வந்திருந்தனர். அப்போது திடீரென கனமழை பெய்தது.

இதனால் தண்ணீர் குகைக்குள் சென்றுவிட்டது. இதையடுத்து அவர்களால் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 18 நாட்கள் கடும் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
12 சிறுவர்கள் சிக்கிய பிறகு இந்த குகை மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இதையடுத்து இந்த குகையை மூட உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் அந்த குகை கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒரு நாளைக்கு 2000 சுற்றுலா பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. குகையின் வாயில் பகுதியையும் காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications