தாய்லாந்து குகைக்குள் மாட்டிய சிறுவர்களுக்கு மன பிரச்சனை.. பிரமையால் தவிப்பு.. அதிர்ச்சி தகவல்!

தாய்லாந்து குகைக்குள் காணாமல் போன 12 பள்ளி கால்பந்து அணி வீரர்களும், 1 பயிற்சியாளருக்கும் மன ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடும் கடற்படை வீரர்கள்- வீடியோ

    பாங்காக்: தாய்லாந்து குகைக்குள் காணாமல் போன 12 பள்ளி கால்பந்து அணி வீரர்களும், 1 பயிற்சியாளருக்கும் மன ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். கடந்த 10 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள்.

    நேற்றுதான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு புதிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது.

    சாப்பாடு

    சாப்பாடு

    அந்த சிறுவர்கள் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே அந்த சிறுவர்கள் மிகவும் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் என்பதால் , சாப்பாடு இல்லாமல் திண்டாடி இருக்கிறார்கள். அழைத்து வந்த பயிற்சியாளரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார். வெள்ளமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    இந்த சிறுவர்கள் மீட்க வந்த நபர்களிடம் முக்கியமான விஷயம் ஒன்றை தெரிவித்துள்ளனர். அதன்படி ''எங்களுக்கு வித்தியாசமான குரல்கள் கேட்டது. எங்களை யாரோ கூப்பிட்டது போல சத்தம் கேட்டது. யானை பிளிறும் சத்தம், நாய் குரைக்கும் சத்தம், கோழி கத்தும் சத்தம் கேட்டது'' என்றுள்ளனர். இதே போல் சில சிறுவர்கள், தங்களுக்கு வித்தியாசமான உருவம் தெரிந்தது என்றும் கூறியுள்ளனர்.

    காரணம்

    காரணம்

    இவர்கள் ஒருவாரத்திற்கும் அதிகமாக சாப்பிடாமல் இருந்ததால், அவர்களுக்கு ஹாலுசினேஷன் எனப்படும் பிரமை ஏற்பட்டு இருக்கிறது. அதன்படி அவர்களுக்கு உணவு கொடுத்த பின் இந்த பிரச்சனை குறைந்துள்ளது. அதேபோல் ஒரே இடத்தில், பல நாட்களாக இருந்த காரணத்தால், அவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    மீட்பு வழிகள்

    மீட்பு வழிகள்

    மேலும் குகையில் புதிய வழியை ஏற்படுத்தி சிறுவர்களை மீட்க முடியாது என்ற முடிவிற்கு வந்துள்ளனர். இதனால் இப்போது இருக்கும் வழியிலேயே அவர்களை மீட்க முடிவெடுத்துள்ளனர். இதனால் தற்போது தண்ணீரை வெளியேற்ற முடிவெடுத்து செயல்பட்டு வருகிறார்கள் என்றுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+