கம்போடியாவில் விஷ்ணு சிலை உடைப்பு.. அது வழிபாட்டு தலமே இல்லை! தாய்லாந்து கொடுத்த விளக்கம்
டெல்லி: கம்போடியாவில் விஷ்ணு சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் தாய்லாந்து நாட்டிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள தாய்லாந்து இடிக்கப்பட்ட அந்த சிலை பதிவு செய்யப்பட்ட மத வழிபாட்டு தலமாக இல்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அந்த இடத்தை மேலாண்மை செய்வதற்காகவும் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளது.
பௌத்த, இந்து மதத்தினரால் இந்த சிலை வணங்கப்பட்டு வந்தது. அப்படியிருக்கும்போது இதை இடித்ததை ஏற்க முடியாது. வன்மையாக கண்டிக்கிறோம் என கம்போடியாவும் கூறியிருந்தது.

தாய்லாந்து கம்போடியா இடையே மோதல்
தென் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே எல்லை பிரச்சினை நிலவுகிறது. எல்லையில் இரு நாட்டு ராணுவம் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரு நாட்டு படைகளும் மூர்க்கத்தனமாக மோதிக்கொண்டன.
இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா தலையிட்டு பதற்றத்தை தணித்தது. இருந்தாலும் அவ்வப்போது இருநாடுகளுக்கும் இடையே உரசல்கள் நீடித்து வருகின்றன. இந்த சூழலில்தான், கடந்த சில வாரங்களாகவே தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே மோதல் அதிகரித்து வருகிறது.
விஷ்ணு சிலை இடிப்பு
இரு தரப்புமே எல்லையில் மாறி மாறி தாக்குதல் நடத்துவதால், எல்லையில் இருக்கும் கிராம மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இரண்டு வாரத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதலால், இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு மத்தியில், எல்லையில் கம்போடியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியை தாய்லாந்து மீட்டது.
தங்களுக்கு சொந்தமான இடம் என உரிமை கோரி வந்த தாய்லாந்து, கம்போடியாவிடம் இருந்து குறிப்பிட்ட அந்த இடத்தை மீட்டதும், அப்பகுதியில் இருந்த விஷ்ணு சிலை ஒன்றை இடித்தது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இரு நாடுகளிடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்தியா கடும் கண்டனம்
கடந்த 2014 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த விஷ்ணு சிலை, தாய்லாந்து எல்லையிலிருந்து சுமார் 100 மீட்டர் (328 அடி) தொலைவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பௌத்த, இந்து மதத்தினரால் இந்த சிலை வணங்கப்பட்டு வந்தது. அப்படியிருக்கும்போது இதை இடித்ததை ஏற்க முடியாது. வன்மையாக கண்டிக்கிறோம் என்று கம்போடியா கூறியிருந்தது.
விஷ்ணு சிலை இடிக்கப்பட்டதற்கு இந்தியாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. உலகெங்கிலுமுள்ள பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்த செயல் இருப்பதாகவும், இத்தகைய அவமரியாதை செயல்கள் நடப்பதை ஏற்க முடியாது என்றும் கூறியிருந்தது.
தாய்லாந்து விளக்கம்
இந்தியா தனது கவலையை பதிவு செய்து இருந்த நிலையில், தாய்லாந்து இது தொடர்பாக விளக்கம் ஒன்றினை அளித்துள்ளது. தாய்லாந்து அதிகாரிகள் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- இடிக்கப்பட்ட அந்த சிலை பதிவு செய்யப்பட்ட மத வழிபாட்டு தலமாக இல்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அந்த இடத்தை மேலாண்மை செய்வதற்காகவும் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியுள்ளது.
இது தொடர்பாக தாய்லாந்து தரப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத நம்பிக்கைகள் மற்றும் புனிதமான இடங்களை அவமதிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்பகுதியை மேலாண்மை செய்வதற்காகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே மேற்கூறிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தாய்லாந்து இறையாண்மையை நிலைநிறுத்தும் நோக்கத்தில் கம்போடியா கட்டுப்பாட்டில் இருந்த இடம் மீட்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications