3 மனைவிகள்.. 7 குழந்தைகள்.. 4-ஆவதாக பாதுகாப்பு அதிகாரியை மணந்தார் 66 வயது தாய்லாந்து அரசர்!
பாங்காங்: தாய்லாந்தில் பாதுகாப்பு அதிகாரியை அந்நாட்டு அரசர் வஜ்ரலங்கோன் மணந்தார். இதன் மூலம் அந்த அதிகாரி புதிய பட்டத்து அரசியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த மன்னர் அதுல்யதேஜ் கடந்த 2016-ஆம் ஆண்டு மரணமடைந்தார். இதையடுத்து அவரது மகன் வஜ்ரலங்கோன் (66) வரும் 4ஆம் தேதி தாய்லாந்தின் புதிய மன்னராக முடிசூட உள்ளார். இவர் அரசர் ராமா 10 எனவும் அழைக்கப்படுகிறார்.
மே மாதம் 4 முதல் 6- ஆம் தேதி வரை இந்த முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

திருமணம்
இந்த நிலையில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த 40 வயதான சுதிடா திட்ஜாய் என்பவரை வஜ்ரலங்கோன் இன்று திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர் புதிய பட்டத்து அரசியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தனிமை
கடந்த 2014-ஆம் ஆண்டு சுதிடாவை தனது பாதுகாப்பு அதிகாரிகளின் துணைத் தலைவராக வஜ்ரலங்கோன் நியமித்தார். இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாகவும் அரண்மனையில் அவ்வப்போது தனிமையில் இருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.

பிராமணர் முறைப்படி
இந்த நிலையில் சுதிடாவை திருமணம் செய்து கொண்டதன் மூலம் அத்தகைய சர்ச்சைகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். இவர்களது திருமணம் புத்த மதம் மற்றும் பிராமணர் முறைப்படி விமரிசையாக நடந்தது.

7 குழந்தைகள்
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை இருவரும் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவர். வஜ்ரலங்கோன் ஏற்கனவே திருமணம் செய்து 3 முறை விவாகரத்து பெற்றவர். அவருக்கு 7 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 4-ஆவதாக சுதிடாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications