விட்டு சென்ற மனைவி.. உணவு சாப்பிடாமல் ஒரு மாதம் பீர் மட்டும் குடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!
பாங்காக்: காதல் தோல்வியோ மனமுறிவோ எதுவாக இருந்தாலும் மனதிற்கு பிடித்தமானவரை விட்டுப் பிரிவது கஷ்டமான காரியம் தான். சரியான முறையில் இதைக் கையாளவில்லை என்றால் அது ரொம்ப மோசமாக மாறிவிடும். அப்படியொரு சம்பவம் தான் தாய்லாந்தில் நடந்துள்ளது. மனைவி பிரிந்து சென்று துக்கம் தாங்க முடியாமல் ஒரு மாதம் சாப்பாடு சாப்பிடாமல் பீர் மட்டும் குடித்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தாய்லாந்தின் பான் சாங் என்ற பகுதியைச் சேர்ந்த 44 வயது நபர் ஒருவருக்கு குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரிந்து சென்ற அவரது மனைவி விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் விவாகரத்து கேஸ் முடிந்த நிலையில், நீதிமன்றம் விவாகரத்து வழங்கியிருக்கிறது.

விவாகரத்தால் உயிரிழப்பு
இருப்பினும், இதனால் அவர் மனம் உடைந்து போனாராம். மனைவி தன்னை விட்டுப் போய்விட்டதால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஒரு மாதம் முழுவதும் பீர் மட்டுமே குடித்து வந்துள்ளார். இந்தச் சூழலில் திடீரென அவர் தனது படுக்கையறையில் இறந்து நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தாய்லாந்து முழுக்க பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உயிரிழந்த அந்த நபர் 44 வயதான தாவீசக் நம்வோங்சா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. படுக்கை அறையில் உயிரிழந்த நம்வோங்சாவை அவரது டீனேஜ் மகன் தான் கண்டுபிடித்திருக்கிறார். அவரது ரூம் முழுக்க 100-க்கும் மேற்பட்ட பீர் பாட்டில்கள் இருந்துள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மகன் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சாப்பாடு சாப்பிடவில்லை
மனைவி பிரிந்த பிறகு நம்வோங்சா தனது 16 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். அவரது மகன் தினசரி தந்தைக்குச் சமைத்துக் கொடுப்பாராம். இருப்பினும், நம்வோங்சா அதைச் சாப்பிட மறுத்துவிட்டு, பீர் மட்டுமே குடித்து வந்ததாக அவரது மகன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் தான் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மகன், தனது தந்தை வலிப்பு ஏற்பட்டு படுக்கையறையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டுள்ளார்.
இதையடுத்து உடனடியாக அவரது மகன் அவசர உதவிக்குக் கால் செய்துள்ளார். உடனடியாக சியாம் ரயோங் அறக்கட்டளையின் மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், நம்வோங்சா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், அவரது ரூமில் 100க்கும் மேற்பட்ட பீர் பாட்டில்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பீர் மட்டும் குடித்தார்
தனது ரூம் முழுக்க நம்வோங்சா பீர் பாட்டிலை மட்டுமே குவித்து வைத்துள்ளார். படுக்கையில் இருந்து வெளியே வரவும், உள்ளே செல்லவும் மட்டுமே கொஞ்சம் இடம் இருந்தது. மற்றபடி ரூம் முழுக்க பீர் பாட்டில் மட்டுமே இருந்துள்ளது. அளவுக்கு அதிகமாக மது குடித்ததே அவரது உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
மகன் தகவல்
நம்வோங்சா உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது பிரேதப் பரிசோதனை முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், நம்வோங்சாவின் மரணத்திற்கு நீண்டகால மதுப்பழக்கமே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விவாகரத்துக்குப் பிறகுத் தனது தந்தை அதிகமாக மது அருந்த ஆரம்பித்ததாகவும், சில நாட்களிலேயே சாப்பிடுவதை முழுமையாக நிறுத்திவிட்டுத் தொடர்ந்து பீர் மட்டும் குடித்து வந்ததாகவும் அவரது மகன் தெரிவித்துள்ளார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications