அடிமடியிலேயே கைவைத்த ஹமாஸ்! பிணை கைதியான இஸ்ரேலின் முக்கிய புள்ளி! அடுத்தது என்ன? ஒரே பரபரப்பு
இஸ்ரேல்: இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருக்கையில், இஸ்ரேலின் மிக முக்கியமான ராணுவ தளபதி ஒருவரை ஹமாஸ் படையினர் சிறைபிடித்துள்ளனர். இவரது கைது சர்வதேச அளவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.
இருப்பினும் தொடர்ந்து அவ்வப்போது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதலை தொடுத்து வந்திருக்கிறது. இந்த பின்னணியில்தான் இன்று காலை ஹமாஸ், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதால் அந்நாடு தற்போது நிலைகுலைந்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொரு புறம் ஜீப் மூலம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு நுழைந்திருக்கின்றனர்.

இப்படி நுழைந்தவர்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 40 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 750 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல 53 இஸ்ரேலியர்களை பிணை கைதிகளாக பிடித்து சென்றிருக்கின்றனர். அதில் இஸ்ரேலிய சிறப்பு படையின் எதிரிகளை 'ஆழ ஊடுருவும் படை' பிரிவின் கட்டளைத் தளபதியான 'நிர்மோத் அலோனியும்' ஒருவர். இதுதான் தற்போது இஸ்ரேலை கலங்கடிக்க செய்திருக்கிறது. ஏனெினல் இந்த அலோனி காசாவின் கட்டுப்பாட்டு படைப்பகுதித் தலைவராகவும் சில காலம் பணியாற்றியிருக்கிறார்.
இஸ்ரேலிய சிறப்பு படையின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவின் பணி அந்நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகும். இவர்கள் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் அமைப்பையும், அதன் முக்கிய நபர்களையும் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். பின்னர் அந்நாட்டின் உளவு அமைப்பான 'மொசாட்' உதவியுடன் திடீரென எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தி அந்த நபரை கொன்றுவிடுவார்கள் அல்லது கைது செய்வார்கள். இப்படி பாதுகாப்பு கவசமாக இருக்கும் அமைப்பின் முக்கிய புள்ளியையே ஹமாஸ் தூக்கியிருப்பது இஸ்ரேலின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், "ஹமாஸ் படையில் இருப்பவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்ற வெறும் கிளர்ச்சியாளர்கள் அல்ல. அவர்கள் அரசியல் புரிதல் கொண்டவர்கள். எனவே அரசியல் தெளிவுடன்தான் இந்த தாக்குதலை தொடுத்திருக்கிறார்கள். தற்போது நிர்மோத் அலோனி கைது செய்யப்பட்டிருப்பதால் நிச்சயம் இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்குதான் வரும். எனவே ஹமாஸ் படையினருக்கு இந்த தாக்குதலில் வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மட்டுமல்லாது ஈரான், எகிப்து போன்ற நாடுகள் நேரடியாகவும், ரஷ்யா மறைமுகமாகவும் இந்த படைகளுக்கு பின்னால் இருப்பதால் இஸ்ரேல் கொஞ்சம் நிதானமாகவே செயல்படும்" என்று கூறியுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications