'ஐஸ் பக்கெட்' சாலஞ்ச் ஓவர்.. இப்போ 'சைஸ்' பக்கெட்..தொப்புளைத் தொட்டா வெற்றி!
லண்டன்: அந்த சாலஞ்ச், இந்த .சாலஞ்ச் என்று போய் கடைசியில் வயிற்றில் கேமராவை வைக்க ஆரம்பித்து விட்டனர் இளசுகள்.. அதாவது பெல்லி பட்டன் சாலஞ்ச் என்ற போட்டி இப்போது இன்டர்நெட்டைக் கலக்கி வருகிறது.
முன்பு ஐஸ் பக்கெட் சாலஞ்ச் வந்தது. அதையடுத்து இந்தியாவில் ரைஸ் பக்கெட் சாலஞ்ச்சை கொண்டு வந்தனர். பின்னர் புக் பக்கெட் சாலஞ்ச் வந்தது. இப்படி விதம் விதமாக அறிமுகப்படுத்தி அசத்தினர். இந்த நிலையில் தற்போது புதிதாக பெல்லி பட்டன் சாலஞ்ச் வந்துள்ளது.
பெல்லி பட்டன் என்றதுமே புரிந்திருக்கும். ஆம், இது தொப்புள் சம்பந்தப்பட்டதுதான். ஆனால் சற்று வித்தியாசமானது.
|
முதுகைச் சுற்றி...
நம்ம ஊரில் தலையைச் சுற்றி மூக்கைத் தொடச் சொல்லுவார்கள் அல்லவா. அதையே அப்படியே உல்டா செய்து முதுகுக்குப் பின்னால் கையைக் கொண்டு போய், அதை அப்படியே முன்னால் கொண்டு வந்து தொப்புளைத் தொட வேண்டும். இதுதான் போட்டி.

ஸ்லிம்மா இருக்கணும்...
இந்தப் போட்டிக்கான முக்கிய நோக்கம், உடம்பைக் குறைத்து ஸ்லிம்மாக வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தத்தானாம். அப்படி இருந்தால் உங்களால் உங்களது தொப்புளைத் தொட முடியும் என்பது இந்தப் போட்டியின் நோக்கமாம்.

வைரல்...
சீனாவின் டிவிட்டர் தளமான வெய்போவில்தான் இது முதலில் தென்பட்டது. பின்னர் வைரலாகி இப்போது சீனா முழுவதும் யாரைப் பார்த்தாலும் தொப்புளைத் தொட்டபடி உள்ளனராம்.

போட்டோக்கள்...
பல பெண்களும் இளம்பெண்களும் தொப்புளைத் தொடும் படத்தைப் போட்டு வருகின்றனர். தொப்புளைத் தொட்டார்களோ, இல்லையோ தொப்புளைக் காட்டியபடி படம் போடுவோர் எண்ணிக்கைதான் அதிகம் உள்ளது.

நிறுத்துங்கள்...
மேலும் #bellybuttonchallenge என்றும் ஹேஷ்டேக் போட்டும் பிரபலமாக்கி விட்டனர். இது தற்போது வைரலாகி விட்டது. ஆனால் இது சுத்தப் பைத்தியக்காரத்தனம் இதை உடனடியாக நிறுத்துங்கள் என்றும் பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பவும் ஆரம்பித்து விட்டனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications