தி பிக் ப்ராஜெக்ட்.. இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்ட 3 பேர்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்
டெஹ்ரான்: கடந்த அக்டோபர் 7ல் நடந்த இஸ்ரேல் மீதான தாக்குதலை விட கொடிய தாக்குதலைத் ஹமாஸ் திட்டமிட்டு உள்ளதாக தி வாஷிங்டன் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவிடம் உதவி பெறுவதற்காக ஹமாஸ் அமைப்பு காத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த உதவி கிடைத்தவுடன் ஹமாஸ் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது.
தி வாஷிங்டன் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனவரி 2022 மற்றும் ஆகஸ்ட் 2023 க்கு இடையில் இந்த 3 தரப்பு.. அதாவது ஹமாஸ் - ஹிஸ்புல்லா - ஈரான் இடையே 10க்கும் மேற்பட்ட சந்திப்புகள் நடந்துள்ளன. இந்த சந்திப்புகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த தகவலை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. கான் யூனிஸில் உள்ள ஹமாஸ் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கணினியில் இதற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

திட்டத்தின் பெயர் The big project:
'The big project' என்ற பெயரில் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இஸ்ரேலில் உள்ள ராணுவ மற்றும் சிவிலியன் தளங்களை குறிவைத்து எல்லை தாண்டிய தாக்குதலை ஹமாஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டமிடல் ஜனவரி 2022 இல் தொடங்கியது. இந்த பெரிய திட்டத்தை செயல்படுத்த இதுதான் சரியான நேரம் என்று இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாம்.
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் ஈரானிய அதிகாரிகளுக்கு ஜூன் 2021 இல் அனுப்பிய கடிதங்களில், இஸ்ரேல் மீதான பெரிய அளவிலான தாக்குதலுக்கு நிதி மற்றும் ராணுவ ஆதரவு கோரி உள்ளனர். மிகப்பெரிய தாக்குதலை நடத்த உள்ளோம் என்று கூறி அந்த திட்டத்தை விவரித்து அதற்கான உதவிகளை ஹமாஸ் அமைப்பு கோரி உள்ளதாம்.
உங்களின் வலிமை, உறுதிப்பாடு, எங்களுக்கு மிகவும் தேவையாக உள்ளது; முதலில் நமது வலிமையை மீட்டெடுக்கவும், இந்த மோதலில் நாம் மீண்டு எழுவதும் அவசியம். நமது திறன்களை பல மடங்கு வளர்த்துக்கொள்ளவும், முறையான தாக்குதல்களை நடத்தவும் உங்களின் உதவி தேவை ஈரானிடம் ஹமாஸ் கோரியதாக என்று அந்த ஆவணங்களில் கூறப்பட்டு உள்ளதாம்.
9/11 ஸ்டைல் அட்டாக்:
பல மாதங்களாக நடத்தப்பட்ட திட்டங்களுக்கு பிறகு .. அமெரிக்காவில் நடந்த 9/11 ஸ்டைலில் செப்டம்பர் 11ல் டெல் அவிவில் உள்ள Azrieli டவர்ஸ் மீது தாக்குதலை நடத்த ஹமாஸ் திட்டமிட்டது. ஆனால் கடைசியில் அதை நிறைவேற்ற முடியாது என்பதால் கைவிட்டு உள்ளனர். ஹமாஸ் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கணினியில் இதற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இனிமேலாவது அந்த பிக் ப்ராஜெக்ட் திட்டத்தை நிறைவேற்ற ஹமாஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் எவ்வளவு பெரியது.. எப்படி இருக்கும்.. ஹமாஸ் எப்படி இஸ்ரேலை தாக்கும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. . இதன் மூலம் இஸ்ரேலில் உள்ள ராணுவ மற்றும் சிவிலியன் தளங்களை குறிவைத்து எல்லை தாண்டிய தாக்குதலை ஹமாஸ் திட்டமிட்டுள்ளது.
ஆனால் இந்த செய்திகளை ஈரான், ஹிஸ்புல்லா மறுத்துள்ளது. நாங்கள் அப்படி திட்டங்கள் எதையும் வகுக்கவில்லை என்று ஈரான் கூறி உள்ளது. மேற்கு ஊடகங்கள் வெளியிட்டு இருக்கும் செய்திகள் தவறானது என ஈரான் எச்சரித்து உள்ளது.












Click it and Unblock the Notifications