அடுத்தவர் மனைவியுடன் உறவு.. ரஷ்யாவுடன் கூட்டணி.. வருகிறது டிரம்ப் பற்றிய புயலை கிளப்பும் புத்தகம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து இன்று புத்தகம் ஒன்று வெளியாக இருக்கிறது.
Recommended Video

நியூயார்க்: உலகத்தையே தன்னுடைய அதிர்ச்சி டிவிட்டுக்களால் கலங்க வைத்துக் கொண்டு இருக்கிறார் டொனால்ட் டிரம்ப். ஆனால் டிரம்ப்பையே கலங்கடிக்க வைத்து இருக்கிறது அவரைப் பற்றி எழுதப்பட்டு இருக்கும் புத்தகம்.
'பயர் அண்ட் ஃபுரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்' என்று புத்தகம்தான் டிரம்ப்பின் மனக்கலத்திற்கு காரணம். மைக்கேல் வுல்ப் என்ற அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையாளர் எழுதிய புத்தகம் இது.
இதில் டிரம்ப் குறித்து உலகத்திற்கு தெரியாத பல முக்கிய விஷயங்கள் கூறப்பட்டு இருக்கிறது. இது அமெரிக்காவில் பிரச்சனையை ஏற்படுத்துமா என்று நினைத்துக் கொண்டு இருந்த போதே டிரம்ப்பின் குடும்பத்திற்குள்ளேயே பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.

எப்படி
டிரம்ப் குறித்து வெளிவர இருக்கும் இந்த புத்தகத்தை 200க்கும் அதிகமான நபர்களிடம் பேட்டி எடுத்து எழுதி இருக்கிறார் மைக்கேல். டிரம்பிற்கு நெருக்கமானவர்கள், டிரம்புடன் வேலை பார்க்கும் நபர்கள் என்று பலரிடம் இவர் பேட்டி எடுத்துள்ளார். இதற்காக ரஷ்யாவில் இருக்கும் சில நபர்களிடமும் பேட்டி எடுத்துள்ளார்.

ரஷ்யா
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக கூறப்பட்டது. அது தற்போது இந்த புத்தகத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது. டிரம்ப் அலுவலகத்தின் முக்கிய அதிகாரியாக இருந்து நீக்கப்பட்ட ஸ்டிவ் பெனான் இதுகுறித்து குறிப்பிட்டு இருக்கிறார். டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா பெரிய அளவில் உதவியதாக அவர் கூறியுள்ளார். டிரம்ப்பின் மகன் ஜூனியர் டிரம்ப் இந்த விஷயத்தில் உதவி உள்ளார்.

பயமோ பயம்
அமெரிக்க தேர்தலில் இவர் வெற்றி பெறுவது அவருக்கே கூட சந்தேகமாகத்தான் இருந்துள்ளது. தேர்தல் முடிவிற்கு பின் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். வெள்ளை மாளிகையை பார்த்து டிரம்ப் இப்போதும் பயப்படுவதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. அங்கு இருக்க அவருக்கு பிடிக்கவில்லை என்றும் இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்தவர் மனைவி
இந்த புத்தகத்தில் இருக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு ஆகும் இது. டிரம்ப் தன்னுடைய நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார் என்று கூறப்பட்டு இருக்கிறது. எப்போதும் தன் நண்பர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுவார் என்றும் இந்த புத்தகத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் சில பேட்டி அளித்துள்ளனர்.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications