For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் ஆராய்ச்சி.. "பேட் வுமனுக்கு பாராட்டு".. வூஹன் லேபிற்கு மிக உயரிய விருது தரும் சீனா?!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா குறித்து ஆராய்ச்சி செய்ததற்காக சீனாவின் வூஹன் ஆராய்ச்சி மையத்திற்கு அந்த நாட்டின் உயரிய அறிவியல் ஆராய்ச்சி விருது அளிக்கப்பட உள்ளது. முன்னதாக வூஹன் மையத்திற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று சீனாவின் வெளியுறவுத்துறை கூறியது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பது தொடர்பான சந்தேகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் வூஹன் வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் தோன்றி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து 90 நாட்களில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்துள்ளார் .

பயோ ஆயுதமாக சீனா இதை உற்பத்தி செய்து வெளியிட்டு இருக்குமோ என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இதன் காரணமாகவே அமெரிக்கா இரண்டாவது முறையாக இந்த வைரஸின் தோற்றம் குறித்து விசாரிக்கும் முடிவை எடுத்துள்ளது.

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிந்த வழக்குகள் வாபஸ்.. மு.க. ஸ்டாலின் அதிரடி8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிந்த வழக்குகள் வாபஸ்.. மு.க. ஸ்டாலின் அதிரடி

என்ன

என்ன

ஆனால் சீனா தொடர்ந்து இந்த புகாரை மறுத்து வருகிறது. வூஹன் ஆராய்ச்சி மையத்தில் இருந்து கொரோனா வெளியாகி இருக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது. சீனாவின் வூஹன் ஆராய்ச்சி மையத்தில் கொரோனா குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டது. ஆனால் இதற்கும், மக்களிடையே பரவும் கொரோனாவிற்கும் தொடர்பு கிடையாது சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.

விருது

விருது


முக்கியமாக வூஹன் வைரலாஜி ஆராய்ச்சி மையத்தின் மூத்த பெண் ஆராய்ச்சியாளர் ஷி ஷெங்கிலி மீது கவனம் திரும்பி உள்ளது. உலக நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர் இவரை பேட் வுமன் என்று அழைக்கிறார்கள். சீனாவை சேர்ந்த ஷி ஷெங்கிலி வூஹன் வைரலாஜி மையத்தில் 18 வருடங்களாக கொரோனா குடும்ப வைரஸ் குறித்தும் வௌவால்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறார். கொரோனா குடும்பத்தை சேர்ந்த சார்ஸ் வைரஸை ஆராய்ச்சி செய்து வந்தார்.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இந்த ஆராய்ச்சிக்காகத்தான் தற்போது சீனாவில் மிக உயரிய விருது கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. கொரோனா குறித்து ஆராய்ச்சி செய்ததற்காக சீனாவின் வூஹன் ஆராய்ச்சி மையத்திற்கு அந்த நாட்டின் உயரிய அறிவியல் ஆராய்ச்சி விருதான சீனாவின் அறிவியல் அகாடமி விருது அளிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அதோடு ஷி ஷெங்கிலிக்கு சிறப்பு பாராட்டும் தரப்பட உள்ளது. கொரோனாவின் குணங்கள் குறித்து ஆராய்ச்சி செய்ததற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது.

சர்ச்சை

சர்ச்சை

கொரோனாவின் தோற்றம் காரணமாக வூஹன் ஆராய்ச்சி மையம் சர்ச்சையில் சிக்கி இருக்கும் நிலையில், இப்படி விருது வழங்க முடிவு செய்திருப்பது சீனா மீதான உலக நாடுகளின் கோபத்தை அதிகரித்துள்ளது. முன்னதாக வூஹன் மையத்திற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று சீனாவின் வெளியுறவுத்துறை கூறியது குறிப்பிடத்தக்கது.

கோபம்

கோபம்

கொரோனா வைரஸை வூஹன் மையம் பரப்பவில்லை. மாறாக கொரோனா குறித்து தெரிந்து கொள்ள வூஹன் மையம்தான் உதவியாக இருந்தது. வூஹன் ஆராய்ச்சிதான் கொரோனாவின் பண்புகளை தெரிந்து கொள்ள உதவியது. இதனால் வூஹன் மையத்திற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று சீனாவின் வெளியுறவுத்துறை கூறி உள்ளது.

English summary
The Chinese government plans to give Top Science Award to bat women and Wuhan Lab for their Coronavirus research.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X