நடுக்கடலில் கவிழ்ந்த கப்பல்.. 64 உயிர்கள் பலியான சோகம்
அண்டனானரிவோ: மடகாஸ்கர் அருகே நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் இருந்து சுமார் 130 பயணிகளை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று நேற்று முன்தினம் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கப்பலில் பயணிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
சிலர் நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்திலேயே தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதனையடுத்து மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை கப்பலில் இருந்த 130 பேரில் 45 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

விபத்து குறித்து வெளியான முதற்கட்ட தகவலில் சரக்குகளை ஏற்றிச்செல்லும் கப்பலில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளதாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேகமாக சென்று பாறையில் மோதி விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அந்நாட்டின் துறைமுக அதிகார தலைவர் ஜீன் எட்மண்ட் தெரிவித்துள்ளார்.
கடலோர காவல் படையினர் உதவியுடன் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இறந்தவர்கன் உடல்கள் மீட்கப்பட்டன. தண்ணீரில் தத்தளித்த சுமார் 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனர். இன்று காலையில் செய்ன்ட் மாரே தீவுகள் அருகே 25 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்மூலம், பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 பேரை காணவில்லை. அவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications