For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி இப்படித்தான் அழைக்க வேண்டும்.. கொரோனா மூலம் பரவும் நோய்க்கு புது பெயர்.. என்ன தெரியுமா?

கொரோனா மூலம் பரவும் நோய்க்கு Covid-19 என்று அதாவது கோவிட் - 19 என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கொரோனாவிலிருந்து மீண்டு வந்த கேரளா மாணவர் ?| First Indian who tested positive for Corona virus now

    பெய்ஜிங்: கொரோனா மூலம் பரவும் நோய்க்கு Covid-19 என்று அதாவது கோவிட் - 19 என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

    சீனாவில் கொரோனா வைரசால் பலி எண்ணிக்கை 1016ஐ தொட்டுள்ளது. இதனால் அந்நாட்டு அரசு பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 2146 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

    மொத்தம் 42638 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 1000 பேருக்கு அதிகமாக இதனால் பலியானது அந்நாட்டை உலுக்கி உள்ளது. நேற்று மட்டும் இதனால் 104 பேர் பலியானார்கள்.

    திடீர் வேகம் எடுத்த கொரோனா.. பிளேக்கிற்கு இணையாக பரவுகிறது.. 1110 பேர் பலி.. நடுங்கும் சீனா! திடீர் வேகம் எடுத்த கொரோனா.. பிளேக்கிற்கு இணையாக பரவுகிறது.. 1110 பேர் பலி.. நடுங்கும் சீனா!

    வைரஸ்

    வைரஸ்

    இந்த நிலையில் இந்த கொரோனா வைரஸ் மூலம் பரவும் நோய்க்கு புதிதாக பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி , கொரோனா மூலம் பரவும் நோய்க்கு Covid-19 என்று அதாவது கோவிட் - 19 என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸின் பெயர் மாற்றப்படவில்லை. ஆனால் இதன் மூலம் பரவும் நோய்க்கு மட்டும் கோவிட் - 19 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சார்ஸ் நோய் ஒருவகை கொரோனா வைரஸ் மூலம்தான் பரவியது.

    மொத்தம் எத்தனை

    மொத்தம் எத்தனை

    மொத்தம் கொரோனா குடும்பத்தில் 6 வகையான வைரஸ்கள் இருக்கிறது. இதன் மூலம் வேறு வேறு விதமான வைரஸ்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் தற்போது 7வது கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்தான் சீனாவில் பரவி வருகிறது. இதனால் ஏற்படும் நோய்களுக்குத்தான் கோவிட் - 19 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை உலக சுகாதார மையம் இந்த பெயரை வைத்தது.

    பெயர் என்ன

    பெயர் என்ன

    கோவிட் - 19 என்று பெயர் வைக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று உலக சுகாதார மையம் விளக்கி உள்ளது. அதில், உலகம் முழுக்க இதை சிலர் தவறான பெயர்களால் அழைத்து வருகிறார்கள். இதனால் பொதுப்பெயர் வைக்க முடிவு செய்தோம். அது எல்லோருக்கும் புரியும் வகையில் இருக்க வேண்டும். யாரையும் கஷ்டப்படுத்தும் விதத்தில் இருக்க கூடாது. எந்த ஒரு இனக்குழுவையும் குறிப்பிடும் வகையில் இருக்க கூடாது.

    எப்படி இது

    எப்படி இது

    இதனால் கொரோனா (corona) என்பதில் உள்ள சிஓ (CO) மற்றும் வைரஸ் (Virus) என்பதில் உள்ள விஐ (VI) மற்றும் டிசீஸ் (disease) என்பதில் உள்ள டி (D) ஆகியவற்றை இணைந்து 2019ல் உள்ள 19ஐ இணைத்து கோவிட் -19 (COVID-19) என்ற பெயரை உருவாக்கி இருக்கிறோம். இது உலகம் முழுக்க இனி ஒரே பெயரால் அழைக்கப்படும். கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது. சீனா இதில் மோசமாக திணறி வருகிறது, என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

    English summary
    The disease that spreads from Coronavirus named a COVID -19 by WHO.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X