விண்வெளியில் வெள்ளிவிழா காணும் ‘ஹப்பிள் தொலைநோக்கி’!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க் : விண்வெளி குறித்து அரிய தகவல்களை அனுப்பி வரும் நாசாவின் ‘ஹப்பிள் தொலைநோக்கி ஏப்ரல் 24ம் தேதி வெள்ளிவிழாவைக் கொண்டாடுகிறது.
கடந்த 1990ம் ஆண்டு விண்வெளியில் ஏவப்பட்டது நாசாவின் ஹப்பில் தொலைநோக்கி. பூமிக்கு மேலே 350 கி.மீ. உயரத்தில் பறந்தபடி தொடர்ந்து 25 வருடங்களாக விண்வெளி பற்றிய பல அரிய தகவல்களை வழங்கி வருகிறது ஹப்பிள்.
பூமிக்கு மேலே சுற்றி வந்து பிரபஞ்சத்தை ஆராய்ந்து படங்கள் எடுத்துத் தரும் ஹப்பிள் தொலைநோக்கியின் சேவை பாராட்டப்படத்தக்கது.

இதோ வெள்ளிவிழா கொண்டாடும் ஹப்பிளின் சிறப்புகள் மற்றும் அது பூமிக்கு தந்த தகவல்களின் தொகுப்பு ஒரு பார்வை...
- ஒரு பேருந்து அளவிலான ஹப்பிள் தொலைநோக்கி, பூமியில் இருந்து சுமார் 552 கிமீ உயரத்தில் நொடிக்கு எட்டு கிமீ வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இது 97 நிமிடத்திற்கு ஒருமுறை பூமியை சுற்றி வருகிறது.
- அகச்சிவப்பு கதிர், புறஊதா கதிர், காணுறு ஒளி ஆகிய மூன்று அலைநீளங்களில் நிறமாலைமானி மற்றும் காட்சி செய்யும் திறன் கொண்டது.
- 0.05 வினாடி டிகிரி விலகியுள்ள பொருட்களைக்கூட பிரித்து இனம் காணும் காட்சி திறன் கொண்டது ஹப்பிள்.

- இளம் விண்மீன்கள் பலவற்றை முதல் தடவையாக நமக்குக் காட்டிய பெருமை ஹப்பிளையே சாரும்.
- ஏறக்குறைய ஒவ்வொரு கேலக்ஸியின் நடுவேயும் பல லட்சம் சூரியன்களின் நிறை கொண்ட பிரம்மாண்டமான கருந்துளை (black hole) ஒளிந்துள்ளதை ஹப்பிள் தான் உலகிற்கு சொன்னது.
- பிறந்த நிலையில் உள்ள ஆரம்ப கட்ட கேலக்ஸிகள் முதல் வளரும் நிலையில் உள்ள பல கட்ட கேலக்ஸிகள் வரை நமக்கு ஹப்பிள் காட்டியுள்ளது. அதனால் கேலக்ஸிகள் உருவாக்கம், வளர்ச்சி முதலியன குறித்து நாம் அறிய முடிகிறது.

- ஹப்பிள் தந்த தகவல்களின் அடிப்படையில் தான் பூமி சுமார் 1300 முதல் 1400 கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என விஞ்ஞானிகளால் துல்லியமாகக் கணிக்க முடிந்தது.
- 7 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ள விண்மீனின் பிரகாசத்தைக் கூட ஹப்பிள் நமக்கு காட்டிக் கொடுத்தது.
- வானவியல் இயற்பியல் (astrophysics) மற்றும் பிரபஞ்சவியலில் (cosmology) ஹப்பிளால் பெரும் புரட்சி ஏற்பட்டது என்பது மறுக்க முடியாதது.
- ஹப்பிளின் தகவல்களைக் கொண்டு மட்டும் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

- கடந்த 1990ம் ஆண்டு மே 20 - ல் ஹப்பிள் முதன்முதலில் கண்ணைத் திறந்து NGC 3532 எனும் விண்மீன் திரளைப் படம் பிடித்தது.
- ஹப்பிளின் படங்களில் தெளிவு இல்லாததைக் கண்டு பிடித்த விஞ்ஞானிகள், 1993ம் ஆண்டு சிறப்பு ஆடி தயார் செய்து விண்ணில் ஏவினர்.
- 1993 முதல் இதுவரை ஐந்து முறை தொலைநோக்கி மேம்படுத்தப்பட்டுள்ளது.
- 10 ஆயிரம் கேலக்ஸிகள் தேன்கூடு போல நிரம்பியுள்ள ஆழ்விண்வெளி புகைப்படம், புதிய விண்மீன்கள் பிறப்பு எடுக்கும் "கர்ப்பப்பை" என வேடிக்கையாக அழைக்கப்படும் "பிறப்பின் தூண்கள்" எனும் வான் முகில் என ஹப்பிளின் புகைப்படங்கள் பிரமிப்பானவை.
- காணுறு ஒளியை இனம் காணும் கேமரா தவிர அகச் சிவப்பு (infrared) கேமரா, 2009-ல் ஹப்பிலில் புதிதாகப் பொருத்தப்பட்டது. தற்போது இந்த ‘நெற்றிக்கண்' வழியாகத்தான் பல சிறப்பு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புறப்பட்ட ஒளியை ஆராய்ந்து நமக்கு இதுவரை புலப்படும் பிரபஞ்சத்தின் விளிம்பில் உள்ள கேலக்ஸிகள் குறித்த தகவல்களைப் பெற்றுள்ளது ஹப்பிள் தொலைநோக்கி.
- ஹப்பிள் தொலைநோக்கி இதுவரை 50க்கும் மேற்பட்ட புறக்கோள்களின் வளிமண்டல ஆய்வுக்கு உதவியுள்ளது.
- ஹப்பிள் தொலைநோக்கியை விட மேலும் ஆற்றம் வாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஒன்றை வடிவமைத்து வருகிறார்கள். இது வரும் 2018ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.
More From
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications