ஷாக்! ஒரே தெருவில் 20 உடல்கள்..மொத்தமாய் புதைக்கப்பட 300 சடலங்கள்.. உலுக்கும் உக்ரைன் போர் காட்சிகள்
கீவ் : உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 38 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு இருந்து மீட்கப்பட்ட நகரத்தில் ஒரே தெருவில் 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஒரே குழியில் 300 உடல்கள் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் கடந்த மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி தற்போது வரை 38 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
உக்ரைன் தலைநகர் கிவ் தவிர, கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது.

உக்ரைன் போர்
உக்ரைன் மீதான போரின் முதற்கட்ட இலக்கை எட்டிவிட்டதாகவும், இனி உக்ரைனின் கிழக்கு பகுதிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தபோவதாகவும் ரஷியா கூறினாலும் இன்னும் அதை செயல்படுத்தவில்லை. மாறாக உக்ரைன் நகரங்களை சுடுகாடுகளாக மாற்றும் மூர்க்கத்தனமான தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக துறைமுக நகரமான மரியுபோல் மீதான தாக்குதல்கள் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகின்றன.

பாதுகாப்பு கேள்விக்குறி
மக்கள் நிலைமை கேரஷ்ய படைகளின் தொடர் குண்டு வீச்சால் மரியுபோல் நகரில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ள நிலையில் அங்குள்ள மக்களை காப்பற்ற விடாமல் ரஷ்யா தடுப்பதாகவும், இதனால் அங்குள்ள மக்களின் நிலை அச்சமூட்டும் வகையில் உள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு இருந்து மீட்கப்பட்ட புச்சா நகரத்தில் ஒரே தெருவில் 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஒரே தெருவில் 20 உடல்கள்
ரஷ்ய துருப்புக்களிடமிருந்து உக்ரேனியப் படைகள் கீவ் அருகே உள்ள புச்சா நகரத்தை மீட்டெடுத்த பிறகு, சனிக்கிழமை ஒரே தெருவில் சிவில் உடையில் 20 பேரின் உடல்கள் கிடந்ததாக AFP செய்தியாளர்கள் தெரிவித்துனர். அதில் ஒரு நபரின் உடலில் கைகள் கட்டப்பட்டிருந்தன. மேலும் தலைநகரின் வடமேற்கே புறநகர் நகரத்தில் குடியிருப்பு சாலையில் பல நூறு மீட்டர்கள் சடலங்கள் சிதறிக்கிடந்தன. ஆனால் உடல்கள் அழுகியிருந்ததால் அவர்கள் குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு முன்பு இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அதிர்ச்சி காட்சிகள்
மேலும் அதே புச்சாவில் உள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் கிட்டத்தட்ட 300 பேர் புதைக்கப்பட்டுள்ளனர் என்று அதன் மேயர் AFP இடம் தெரிவித்தார். புச்சாவில், நாங்கள் ஏற்கனவே 280 பேரை வெகுஜன புதைகுழிகளில் புதைத்துள்ளோம்" என்றும் , ரஷ்யாவால் அழிக்கப்பட்ட நகரத்தின் தெருக்களில் சடலங்கள் சிதறிக் கிடக்கின்றன என மேயர் அனடோலி ஃபெடோருக் கூறினார். இறந்த மக்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் எனவும், இறந்தவர்களில் 14 வயது சிறுவன் பெண்கள் உட்பட பலரும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications