மாயமான விமானத்தின் பைலட் ஜாலியா பேசுவாரு, தம் அடிப்பாரு.....: முன்னாள் பெண் பயணி பரபரப்புத் தகவல்
மெல்போர்ன்: மாயமான மலேசிய விமானத்தின் பைலட் விமான ஓட்டிகள் அறையில் புகைபிடித்தார், ஜாலியாக பேசினார் என பரபரப்புத் தகவல்களை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார் இளம் பெண் ஒருவர்.
கடந்த சனிக்கிழமையன்று மலேசிய விமானம் ஒன்றி 239 பயணிகளுடன் நடுவானில் திடீரென மாயமானது. அந்த விமானம் விபத்தில் சிக்கியதா அல்லது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா எனத் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மாயமான அந்த விமானத்தை அப்துல் ஹமீது என்ற பைலட் தான் ஓட்டிச் சென்றுள்ளார். தற்போது அவரைப் பற்றி பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஜோந்தி ரோஸ் என்ற இளம் பெண் பேட்டியளித்துள்ளார். இவர் கடந்த 2011ம் ஆண்டு பூகெட்டில் இருந்து கோலாலம்பூருக்கு ஆகாயமார்க்கமாக பயணம் செய்துள்ளார். அப்போது அவர்களது விமானத்தை தற்போது மாயமான மலேசிய விமானத்தில் பைலட் தான் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது விமானத்தில் வைத்து அவருடன் ஜோந்தி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். தற்போது அதனை ஆதாரமாக காண்பித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் ஜோந்தி.
அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

ஹமீத் அறிமுகம்...
மூன்று வருடங்களுக்கு முன்னர் நானும் எனது தோழி ஜான் மாரியும் பூகெட்டில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்திற்கு காத்திருந்தோம். அப்போது விமானி அப்துல் ஹமீது எங்களை விமான ஓட்டிகள் அறையில் இருந்து பயணிக்க விருப்பமா என்று கேட்டனர். நாங்களும் சென்றோம்.

ஜாலியான பைலட்டுகள்...
என்னை விமானத்தில் பைலெட்கள் அறைக்கு அழைத்து சென்றார். அங்கு மிகவும் ஜாலியாக பைலட்கள் பேசினார்கள். நாங்கள் விமானம் முழுவதும் சுற்றிப் பார்த்தோம்.

போட்டோ எடுத்தோம்....
புகைப்படம் எடுத்தனர். புகைப்பிடித்தனர். அவர்கள் மிகவும் நண்பர்களாக பேசினர். நாங்கள் எங்களது தாய்லாந்து பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடைபெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

வினானியின் ஒழுக்கம்...
மேலும், தற்போது மாயமான மலேசிய விமானத்தை ஓட்டி சென்ற விமானி 'கொஞ்சம் ஒழுக்கம் கெட்ட' செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் ஆனால் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை என்றும் ஜோந்தி ரோஸ் கூறியுள்ளார்.

வருத்தம்....
அதேபோல், ஹமீத் குடும்பத்திற்கும் மற்றும் அவரது நண்பர்களுக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், நண்பர் ஹமீது ஓட்டி சென்ற விமானம் மாயமாகியது குறித்து கேள்விபட்டதும் எனது இதயம் வெடித்துவிட்டது. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது' என அவர் தெரிவித்துள்ளார்.

நீடிக்கும் குழப்பம்...
ஏற்கனவே மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டதா அல்லது விபத்துக்குள்ளானதா எனக் குழப்பம் நீடிக்கும் நிலையில், அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற பைலட் மீது இத்தகைய தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இளம்பெண்ணின் இந்த தகவல் மாயமான விமானம் விவகாரத்தில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications