ரஷ்ய அதிபர் புதினின் "மனைவி.." யார் இந்த "மர்ம பெண்" அலினா கபேவா? 4 குழந்தைகள் வேறாம்!
மாஸ்கோ : உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஓயாமல் தொடர்ந்துகொண்டிருக்கும் வேளையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அரசியல் செயல்பாடுகள், பொதுப்பணிகளை கடந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தொடர் விமர்சனங்களும் வதந்திகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்ற தகவல் தொடங்கி அவரது ஒழுக்கம் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் இணைந்து இருப்பவர்தான் அலினா கபேவா. ரஷ்யாவின் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான இவருக்கும் விளாடிமிர் புதினுக்கும் ரகசிய உறவு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

யார் இந்த அலினா கபேவா?
38 வயதான அலினா கபேவா ஒரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. ஒலிம்பிக்ஸில் ரஷ்யாவுக்காக விளையாடிவர். பின்னர் அதிலிருந்து ஓய்வுபெற்ற அவர், முழு நேர அரசியல்வாதியாக மாறினார். 1983 ஆம் ஆண்டு பிறந்த கபேவா 3 வயதிலிருந்தே ஜிம்னாஸ்டிக் கலையை கற்கத் தொடங்கினார்.

15 வயதிலேயே சாதனை
தனது 15 வது வயதிலேயே போர்சுகலில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். அப்போது ரஷ்ய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களிலேயே மிகவும் இளம் வயதுடையவர் கபேவாதான். ஆனால், தனக்கு மூத்தவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி 15 வது வயதிலேயே ஐரோப்பிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றார்.

வெற்றி வீராங்கனையாக வலம் வந்த அலினா
1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன் போட்டியிலும் வெற்றிபெற்று அவர் முத்திரை பதித்தார். ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற
ஜிம்னாஸ்டிக் உலக சாம்பியன் தொடரில் வென்று உலக சாம்பியனாக மிளிர்ந்தார். ரஷ்யாவுக்காக 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்றுகொடுத்து இருக்கிறார் அலினா கபேவா. உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்ககனையாக திகழ்ந்த அவர், 2 ஒலிம்பிக் பதக்கங்கள், 14 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள், 21 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்று இருக்கிறார்.

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை
கடந்த 2001 ஆம் ஆண்டு அலினா கபேவாவும் அவரது சக வீராங்கனை இரினா சஸ்சினாவும் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினர். இதற்காக 2 ஆண்டுகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கக்கூடாது என இருவருக்கும் தடை விதிக்கப்பட்டது. தடை முடிந்த 2002 ஆம் ஆண்டு மீண்டும் விளையாடத் தொடங்கிய அலினா 2004 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார்.
அதன் பிறகு மீண்டும் விளையாட்டை தொடர்ந்த அலினா 2007 ஆம் ஆண்டு இறுதி ஓய்வை அறிவித்தார். 2004 ஆம் ஆண்டு அவருக்கு டேவிட் என்ற காவலருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், 2005 ஆம் ஆண்டே நிச்சயம் முறிவுக்கு வந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்
கடந்த 2014 ஆம் ஆண்டு சோச்சி குளிர்கால ஒலிம்பிக் தொடரில் அலினா கபேவா ரஷ்யாவுக்கான ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது அதிபர் விளாடிமிர் புதின் உடனான உறவு காரணமாக அவருக்கு இந்த கவுரவம் கிடைத்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒருங்கிணைந்த ரஷ்ய கட்சியில் இணைந்து அரசியல் அவதாரம் எடுத்து அலினா நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

புதின் விவாகரத்தும் அலினாவின் மோதிரமும்
கடந்த 2008 ஆம் ஆண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அலினாவை திருமணம் செய்துகொள்ளப்போவதாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு அப்போது மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதே நேரம் புதின் 2016 ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார். அப்போது, அலினாவின் மோதிர விரலில் மின்னிய மோதிரம் காண்போர் கண்களை உறுத்த, அதைவைத்து புதினுக்கும் அலினாவுக்கும் திருமணம் நடந்துவிட்டதாக பேசத் தொடங்கினர் பலர்.

இருவருக்கும் குழந்தைகள் உள்ளதா?
இந்த குற்றச்சாட்டை புதின் பலமுறை மறுத்துவிட்ட நிலையில் இருவருக்கும் 4 குழந்தைகள் இருப்பதாக செய்திகள் வெளியாகின. 2 ஆண் குழந்தைகளும், இரட்டை பெண் குழந்தைகளும் சுவிட்சர்லாந்தில் வசிப்பதாகவும், அவர்களுக்கு சுவிட்சர்லாந்து பாஸ்போர்டுகள் இருப்பதாகவும் கூறப்பட்டன. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு முன்பாகவே அவர் தனது குடும்பத்தினரை சுவிட்சர்லாந்தில் யாருக்கும் தெரியாத ரகசிய இடத்தில் வைத்திருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications